பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

55

மங்கை காபியைக் கொண்டு வந்து வைத்து விட்டு, “அப்பா ஏதோ கேட்டாரே! அதனால் வருத்தமாயிருக்கிறாயா? சிவா! என்னண்டை சொல்லேன்” என்று அவனைக் கனிவோடு பார்த்தவாறே கேட்டாள்.


“அதெல்லாம் ஒன்றுமில்லை, சித்தி...” என்று சிவகுமாரன் சொல்லு முன்பே, மங்கையர்க்கரசி, “அப்பா ஒன்று சொல்லுகிறார் என்றால், நல்லத்துக்குத் தான் சொல்வார். அவர் கட்டுத் திட்டம் செய்கிறாரே என்று வருத்தப்படுவது கூடாது! நானும் தான் உன்னைக் கேட்கிறேன், படிக்கிற பிள்ளைக்கு இதற்குள் ஊர் விவகாரம் எதற்கு?” என்று விநயமாக வினவினாள்.


இதுவரை அறைக் கதவண்டை நின்று மங்கைதன் பிள்ளைக்குப் பரிவாக உபசாரம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த திலகவதி, “அப்படிக் கேளு, மங்கை! அப்படிக் கேளு! பிள்ளையாண்டான் இதற்குள்ளாகவே அப்பாவைப் போல அரசியல் தலைவராகிவிடப் பார்க்கிறாரு...” என்று சிரித்தவாறே கூறினாள்.


“சும்மா இரு, அம்மா! நீ ஒன்னு...” என்று கூறிக் கொண்டே அவன் எழுந்து போனான்.


போகும் சிவகுமாரனத் தாயன்புடன் பார்த்துக் கொண்டே, “புலிக்குப் பிறந்தது பூனையாய் விடுமா, அக்கா! சிவன் நம்ம அத்தானைவிடப் பெரிய மனுஷனாக ஆகத்தான் போகிறான்! நீ வேண்டுமானால் பாரேன்!... ...ஆனால், அத்தான் சொல்லுவது போல, படிப்பு முடிகிறவரை, பொது விவகாரங்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது நல்லது. அதைத்தான் சிவனுக்கு நாம் அடிக்கடி ஞாபகப்படுத்திச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்...... ” என்று கூறினாள்.


திலகவதி சிரித்துக் கொண்டே, “சரி, சரி நீயும் சொல்ல ஆரம்பித்துவிட்டாயோ, இவ்லையோ! இனிமேல் சிவன் உருப்பட்டாற் போலத்தான்...... தேச சேவை, மக்கள் தொண்டு என்று சொல்லி அவர் இப்படிக்கிடந்து தொல்லைப்