பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

57

இருப்போம். புல்லர்கள் கூட்டம் பூண்டோடு ஒழியப் போகும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது உங்களுக்குத் தெரியாத விஷயமா நான் சொல்லப் போகிறேன்?...” என்று விடைபெற்றுக் கொள்ளலானார்.


ஆழ்ந்த சிந்தனையிலிருந்த சதானந்தம் பிள்ளை துணுக்குற்று எழுந்து, “போய் வருகிறீர்களா? வணக்கம்; போய் வாருங்கள்” என்று கூறி வழியனுப்பினார்.


“ஐயோ, அத்தான் மனம் எப்படி நொந்து போயிருக்கிறது” என்று இரக்கத்தோடு கூறிக்கொண்டே உள்ளே போகலானாள் மங்கை.


திலகவதி கணவன் இருக்கும் இடஞ் சென்றாள்.

6

“திலகம், திலகம்! எங்கே வீட்டில் யாரையும் காணோம்...?”


சதானந்தம் பிள்ளை தன் மனைவியைக் கூப்பிட்டுக் கொண்டே வந்தவர், சந்தடியே இல்லாதது கண்டு சுற்று முற்றும் பார்க்கலானார். அவருடைய கரங்கள் பழக்க விசேஷத்தால் தாமாகவே அவர் போட்டிருந்த மேல் உத்தரீயத்தை எடுத்து ‘ஸ்டாண்டில்’ மாட்டின.


இதற்குள் பின்கட்டிலிருந்த திலகவதி கணவனுடைய குரலை எப்படியோ கேட்டுவிட்டு, “மங்கை மங்கை! எங்கே இருக்கிறாய்? அத்தான் வந்திருக்கிறார் போலிருக்கிறது பார்!” என்று குரல் கொடுத்தாள்.


தன் மனைவி புறக்கடையிலிருந்து கொண்டே மங்கையர்க்கரசியை ஏவியதன் காரணத்தை உடனே புரிந்துகொண்ட சதானந்தம் பிள்ளை, “ஓ! கேஸூவல் லீவா?” என்று புன்சிரிப்புடன் தமக்குள் கூறிக்கொண்டார். அவர் சட்டையைக்

து - 4