பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6


வதற்காக நாட்டு நடப்பையும் அரசியல் பிரதிபலிப்பையும் தொட்டுக் காட்டியிருந்தாலும், இதில் ஒரு நிகழ்ச்சிகூட உண்மையில் நடந்ததில்லை. இந்நாவலில் நடமாடும் கதாபாத்திரங்கள் உயிராக உள்ளவர்களையோ, காலஞ் சென்றவர்களையோ யாரையும் குறிப்பிடுவதில்லை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படை உண்மையை வைத்துக்கொண்டுதான் வாசக நேயர்களும் எழுத்தாளச் சகோதரர்களும் இந்நாவலைப் படித்துச் சுவைக்க வேண்டும். இலக்கிய விமர்சகர்களும் சீர்தூக்கிப் பார்த்துத் தங்கள் கருத்தை நடுநிலையாக வெளியிட வேண்டும். கதை நிகழுங் களம், காலம், சூழ்திலை ஆகியவைகளை அறிந்து கொள்ளாமல், கதாசிரியன் எந்தக் கருத்தில் அல்லது எந்தக் கண்ணோட்டத்தில் தன் படைப்பை உருவாக்கியிருக்கிறன் என்பதைப் புரிந்து கொள்ளாமல் அல்லது எண்ணிப் பார்க்காமலே விமர்சகர்கள் சிலர் கதையை மட்டும் மேலெழுந்த வாரியாகப் பார்த்து விட்டுத் தங்கள் கருத்தைத் தாறுமாறாக வெளியிட்டுத் தடுமாறுகின்றனர். கதையின் கருப்பொருளையும் கதாசிரியன் கதையை எழுதிய நிலையையும் நோக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமானால், நூலாசிரியன் எழுதியுள்ள முன்னுரையை முக்கியமாக வாசித்து அறியவேண்டும். அப்போதுதான் வாசகர்கள் கதையை நன்றாகச் சுவைக்க முடியும். விமர்சகர்கள் ஆசிரியனின் படைப்பைக் குறித்துச் சரியான மதிப்புரை கூறமுடியும். வாசகர்களும் எழுத்தாளர்களும் இலக்கிய விமர்சகர்களும் இந்நாவலைப் படிப்பதற்கு முன், நான் எழுதியுள்ள முன்னுரையைப் படிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்நாவலில் நடமாடும் கதாபாத்திரங்களைப் பற்றிச் சில வார்ததைகள் சொல்ல விரும்புகிறேன். இந்நாவலில் முக்கிய பாத்திரங்களாக மூவர் வருகின்றனர். அவர்கள் மங்கையர்க்கரசி, சதானந்தம் பிள்ளை, திலகவதி ஆகியோராவார். இவர்களில் கதைத் தலைவன் சதானந்தம் பிள்ளை என்பது யாருக்கும் ஐயமிருக்க முடியாது. ஆனால், கதைத் தலைவி