பக்கம்:துளசி மாடம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 215


வைத்து வியாபாரம் செய்ததால் அந்தக் கடையின் வளர்ச்சியை யாராலும் த டு க்க முடியவில்லை. கடைக்குச் சாமான் வாங்க வருகிற ஆண்களோ, பெண் களோ, சிறுவர்களோ, யாவரிடமும் காண்பிக்கப்பட்ட மரியாதையும், பண்பாடும், அக்கறையும், அ ந் த க் கடைக்குத் தனிப் ப்ெருமையை அளித்திருந்தன. இறை முடிமணி கடைக்கு வைத்திருந்த பெயர், கடையில் மாட்டியிருந்த படம், அவரது தனிப்பட்ட கொள்கைச் சார்புகள் எதுவும் விற்பனையைப் பாதிக்கவில்லை. சர்மாவுக்கே நிலைமை புரிந்தாலும் ஒரு வார்த்தைக்காக 'வியாபாரம்லாம் எப்படி இருக்கு குருசாமி ?"-என்று அவனையும் கேட்டு வைத்தார்.

'ரொம்ப நல்லாவே இருக்குங்க" என்று அவனிட மிருந்து பதில் வந்தது. பின்பு அங்கிருந்து இறைமுடிமணி யின் விறகுக் கடைக்குப் போனார் அவர்.

விறகுக் கடைக்கு அவர் போனபோது இரண்டு முன்று லாரியில் மூங்கில் சவுக்குக் கட்டைகள், கிடுகுக் கீற்று எல்லாம் வந்து இறங்கிக் கொண்டிருந்தன.

தேசிகாமணி நாம தனியாக் கொஞ்சம் பேசணும். இங்கே ரொம்பக் கூட்டமா இருக்கே ? ஆத்தங்கரைப் பக்கமாப் போகலாமா ?” -

"ஒரு பத்து நிமிஷம் உட்காரேன் விசுவேசுரன் : லோடு இறக்கிக்கிட்டிருக்காங்க."

சொன்னபடி பத்து நிமிஷத்தில் இறைமுடிமணி வந்து விட்டார். அவரும் சர்மாவும் பே சி க் கொண்டே ஆற்றங்கரைப் பக்கம் நடந்தார்கள்.

இறைமுடி மணியை ஆற்று மணலில் ஒரிடத்தில் உட்கார வைத்து விட்டுச் சர்மா-சந்தியா வந்தனத்தை முடித்துக் கொண்டு வந்து விடுவதாகச் சொல்விச் சென்றார். அவர் வருகிறவரை இறைமுடிமணி ஆற்று மணலில் காத்திருக்க வேண்டியதாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/217&oldid=579933" இலிருந்து மீள்விக்கப்பட்டது