பக்கம்:துளசி மாடம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 துளசி மாடம்


கொண்டிருந்த அச்சகர்களை வேணுமாமாவும் கமலியும் மரியாதையாக எழுந்து முன் சென்று நின்று வரவேற். நார்கள்.

அவர்களை ஒவ்வொருவராகப் பிரியத்தோடு பேர் சொல்லி அழைத்து விளக்கு வைத்திருந்த மனைப் பலகைக்கு அருகே போடப்பட்டிருந்த பெஞ்சியில் அமரச் செய்தார் வேனுமாமா. அவர் கேட்க வேண்டுமென்றே அவர்கள் காத்திருக்கவில்லை. அவர்களாகவே கமலியைச் சுட்டிக்காட்டி, "சாட்சாத் மகாலட்சுமி மாதிரி இருக்கா! சித்தே முன்னே இவ ஸ்லோகம் சொல்விண்டிருக்கிறதைக் கேட்டப்போ மெய் சிலிர்த்தது. சரஸ்வதி தேவியே இங்கே வந்து சொல்லிண்டிருக்காளோன்னு தோணித்து. 'இவளுக்கு எதிராக் கோர்ட்டிலே வந்து சாட்சி சொல்ல ணும்னு எங்களையெல்லாம் நிர்ப்பந்தப்படுத்தறா சுவாமி."

"அப்படிக் கோவில்லே இந்தக் கமலி என்னதான் பெரிய தப்புப் பண்ணிட்டா? எதுக்காக யார் வந்து உங்களை இப்போ நிர்ப்பந்தப்படுத்தறா?..."

'தப்பாவது ஒண்ணாவது? அப்படிச் சொன்னா நாக்கு அழுகிப் போயிடும். அதைப் போல அபசாரம் வேற இருக்க முடியாது. நிஜத்தை அப்படியே சொல்லணு மானா ஆசார அநுஷ்டானம் தெரிஞ்ச நம்ம மதஸ்தர் களைவிட அதிக ஆசார அதுஷ்டானத்தோடவும் அடக்க ஒடுக்கமாகவும் இவ கோவில்லே நடந்துண்டான்னு சொல்லனும்."

"இதுதான் நெஜமானா நீர் இதை அப்படியே கோர்ட் டிலே வந்து சொல்ல வேண்டியதுதானே?”

"கோர்ட்டிலே வந்து என்ன சொல்லுவேனோ தெரி யாது. ஆனா இதுதான் சத்தியம். நிர்ப்பந்தத்துக்காகவும் பொழைப்புக்காகவும் கோயில்லே எக்ஸிக்யூடிவ் ஆபீசர் சொல்றதுக்காகவும் சீமாவையருக்காகவும் பயந்து அவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/272&oldid=579988" இலிருந்து மீள்விக்கப்பட்டது