பக்கம்:துளசி மாடம்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 துளசி மாடம்


களைத் தன்னருகே அண்டவிடாமல் வீம்பு பிடித்தாள் அவள். சர்மா தன்னைக் கலந்து கொள்ளாமலும், பொருட்படுத்தாமலுமே ரவிக்கும் கமலிக்கும் கல்யாணத் துக்கு ஏற்பாடு செய்கிறார் என்று அறிந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து காமாட்சியம்மாள் மீளவே இல்லை. அன்றிலிருந்து படுத்த படுக்கையாகி விட்டாள். சர்மா வையோ மற்றவர்களையோ பொருட்படுத்தக் கூடா தென்ற முரண்டில் தன் பிறந்தகத்து ஊருக்குக் குமாரைப் பஸ்ஸில் புறப்பட்டுப் போகச் சொல்லி முன்பு சங்கர மங்கலத்தில் பிரம்மோத்ஸவ சமயத்தில் வந்து தங்கள் வீட்டில் தங்கிவிட்டுச் சர்மாவுடன் கோபித்துக் கொண்டு வேறு வீட்டுக்குப் போய்த் தங்கிய தன் பெரியம்மாப் பாட்டியை அழைத்து வரச் செய்திருந்தாள் காமாட்சி யம்மாள். கமலியே வேணுமாமா வீட்டுக்குப் போயிருந்த தனால் பாட்டி தன்னோடு வீட்டில் தங்க ஆட்சேபணை எதுவும் இராதென்று எண்ணித்தான் காமாட்சியம்மாள் அவளை வரவழைத்திருந்தாள். பத்து அரைத்துப் போடு வதற்கென்றும் நாட்டு மருந்து வைத்தியம் சொல்வதற் கென்றும் பக்கக்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டி வேறு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தாள்.

அப்பாவைப் பற்றியோ, ரவி அண்ணாவைப் பற்றியோ கமலியைப் பற்றியோ, பேசினாலே அம்மா எரிந்து விழுகிறாள், கோபப்படுகிறாள்-அவளுக்கு, அதனால் உடம்புக்கு அதிகமாகி விடுகிறது-என்று தெரிந்து குமாரும் ரவியும் அவர்களைப் பற்றியெல்லாம் அம்மாவிடம் பிரஸ்தாபிப்பதையே தவிர்த்துக் கொண் டிருந்தார்கள். கூப்பாடுகளும் வெளிப்படையான சண்டை சச்சரவும் இல்லை என்றாலும் வீட்டில் சண்டையின் அறிகுறியான ஒரு வேண்டத்தகாத அமைதி தொடர்ந்து நிலவிக் கொண்டுதானிருந்தது.

ஒததாசைக்காகக் குமார் பெரியம்மாவைக் கிராமத் திலிருந்து அழைத்துக் கொண்டு வந்துவிட்ட தினத்தன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/294&oldid=580010" இலிருந்து மீள்விக்கப்பட்டது