பக்கம்:துளசி மாடம்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 299


-காமாட்சியம்மாள் தன் முகம் பெரியம்மாவுக்கும் முத்து மீனாட்சிப் பாட்டிக்கும் நேரே தெரியாதபடி படுக்கையில் மறுபுறம் ஒருக்களித்தாற் போலத் திரும்பிப் படுத்துக் கொண்டாள். அவள் கண்களில் நீர் வழிந் தோடியது ரவியின் கலியானத்தைப் பற்றி அவள் வருடக்கணக்காகக் கட்டி வைத்திருந்த கோட்டைகள் தகர்ந்த வேதனையில் மெல்ல அழத் தொடங்கியிருந்தாள் eᏭᏐᏮaféji .

"கஞ்சி சாப்பிடறயாடி ! வெறும் வயத்தோட எத்தனை நாழிதான் இருப்பே ?”

‘'வேண்டாம் பெரியம்மா ! பசியே தோணலை. மந்தமா இருக்கு சித்தே நாழி கண் மூடறேன். ரொம்ப அசதியா இருக்கு."

அவர்களோடு சம்பாஷணையைத் தவிர்க்க விரும்பிக் காமாட்சியம்மாள் பொய்யாகக் கற்பித்துக் கொண்ட து.ாக்கம் அது.

ထိဒီး - ် - . డి

நாளைக் காலையில் கேஸ் தீர்ப்பு என்றால் முதல் நாள் முழுவதும் சர்மாவும், வேணுமாமாவும் பரஸ்பரம் வேண்டியவர்களைப் பார்த்துக் கலியாணத்திற்கு அழைப் பதும் பத்திரிகை கொடுப்பதுமாக இருந்தனர். கோர்ட்டைப் பற்றியோ கேஸைப் பற்றியோ, தீர்ப்பைப் பற்றியோ கவலையில்லாமல் அலைந்து கொண்டிருந் தார்கள் அவர்கள். சென்னையிலிருந்து ஒரு வாரப் பத்திரிகை ஆசிரியர் இந்த விநோதமான கலியாணத்தைநான்கு நாளும் ஒரு நிகழ்ச்சி கூட விடாமல் புகைப்படம் எடுக்க வரலாமா என்று அனுமதி கேட்டு எழுதியிருந்தார் ஆட்சேபணையில்லை; வரலாம்-என்று பதில் எழுதிய வுடன் அந்தப் பத்திரிகையாசிரியருக்கு ஒரு திருமண அழைப்பிதழையும் தபாலில் அனுப்பி வைத்தார் வேணு மாமா, தினசரிப் பத்திரிகைகளில் கோர்ட் செய்தியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/301&oldid=580017" இலிருந்து மீள்விக்கப்பட்டது