பக்கம்:துளசி மாடம்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 துளசி மாடம்


சென்று முயன்று பார்த்தாள். ஆனால், காமாட சி யம்மாள் எழுந்து நடமாடக்கூட முடியாத நிலைக்குத் தளர்ந்திருந்தாலும், "மாe மனசிலே ஒண்ணும் வச்சிக் காமே வந்து சந்தோஷமாக் கல்யாணத்தை நடத்திக் குடுங்கோ. இது உங்காத்துக் கல்யாணம்" என்று வசந்தி வேண்டியபோது அ த ற் கு உற்சாகமாகவோ எதிராகவோ இசைவாகவோ பதில் சொல்லாததாலும் வசந்தியே மேற்கொண்டு அதை வற்புறுத்தவில்லை.

"எல்லாம் ரொம்ப லட்சணமாகத்தான் இருக்குடி உங்க காரியம் ! பிள்ளைக்கு அம்மா இங்கே இப்பிடிக் கிழிச்ச நாராக் கெடக்கறா, நீங்க பாட்டுக்கு அங்கே ஜாம் ஜாம்னு மேளதாளத்தோட கல்யாணத்தை நடத்திண்டிருக்கேளே !' என்று முத்துமீனாட்சிப் பாட்டி யும், கிராமத்திலிருந்து வந்திருந்த காமாட்சியம்மாளின் பெரியம்மாவும் வசந்தியிடம் குறைப்பட்டு அலுத்துக் கொண்டார்கள். ஆனால் காமாட்சியம்மாள் உற்சாக மாக இல்லையென்றாலும் அப்போது வசந்தியைச் சினந்தோ கடிந்தோ எதுவும் பதில் சொல்லவில்லை. அதே சமயம் காமாட்சியம்மாளின் அந்த பதிலில் எந்த இசைவும் கூடத் தெரியவில்லை.

"நான்தான் இப்படிக் கெடக்கிறேனே ? எங்கே வரது ? எதுக்குப் போறது ?"-என்று கிணற்றுக்குள் ளிருந்து வருவதுபோல வார்த்தைகள் தளர்ந்து நலிந்து வெளி வந்தன அவளிடமிருந்து. .

"தொடங்கறச்சேயே அச்சான்யம் மாதிரி அபசகுன மாக் கல்யாணப் பந்தல்லே நேத்து ராத்திரி தீப்பிடிச்சு டுத்தாமேடீ "- என்று முத்துமீனாட்சிப் பாட்டி நீட்டி முழக்கிக் கொண்டு ஆரம்பித்தாள். வசந்தி அதற்குப் பதில் சொல்லவில்லை. மனிதர்களின் சூழ்ச்சியால் நடை பெறும் காரியங்களுக்கு எல்லாம் அச்சான்யம், அபசகுனம் என்று பெயர் சூட்டிவிடும் பழங்கால மனப் பான்மையை எண்ணி வியந்தாள் வசந்தி. முன்பு சர்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/314&oldid=580030" இலிருந்து மீள்விக்கப்பட்டது