பக்கம்:துளசி மாடம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 துளசி மாடம்


முடிவாகாமல் இன்னும் இழுபட்டுக் கொண்டிருந்த தனால்-அவர் திருமணத்துக்கு வர முடிந்திருந்தது. நிறையத் தொழிலதிபர்களும், வர்த்தகர்களும், பிரமுகர் களும்கூட வந்திருந்தார்கள்.

“உம்மை சாட்சாத் ஆஞ்சநேயர்னுதான் சொல்ல னும் நாயுடு அநுமார் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்த மாதிரி ராத்திரியோட ராத்திரியா எல்லாச் சாமானையும் கொண்டு வந்து எப்படியோ கல்யாணப் பந்தலைப் பழையபடி போட்டு மூடிச்சுட்டீர்...” என்று நாயுடுவைப் பாாரட்டினார் வேணுமாமா. பெண் மணிகளின் கூட்டத்தைப் பொறுத்தவரை உள்ளூர் வைதீகக் குடும்பத்துப் பெண்களும் உறவுக்காரர்களின் வீட்டுப் பெண்களும் அதிகம் தென்படவில்லை என்றாலும், சற்றே நாகரிகமடைந்த குடும்பத்துப் பெண்களும், உத்தியோக நிமித்தம் வெளியூர் சென்றிருந் தவர்களும் வேணுமாமா, சர்மா ஆகியோரின் உறவு வகையினருமான பெண்களும் வித்தியாசம் பாராட்டா மல் அந்த திருமணத்துக்கு இயல்பாக வந்திருந்தார்கள்.

பாணிக்ரஹணம், ஸப்தபதி, அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் முதலிய திருமணச் சடங்குகளைப் பற்றி ஏற்கெனவே புத்தகங்களில் படித்தும், ரவியிடம் கேட்டும் அறிந்திருந்த கமலி இப்போது ஒவ்வொன்றை யும் தன் சொந்த அனுபவமாகவே இரசித்து மகிழ்ந் தாள். அவற்றை அப்போது அவள் அந்தரங்கமாக விரும்பினாள் என்றே சொல்லலாம்.

'ஏழு அடிகள் என்னோட உடன் நடந்து வந்து விட்ட நீ இனி என் தோழியாகிறாய். நாம் இருவரும் உயிர் நண்பர்களாகி விட்டோம்! உன்னோடு இன்று நான் அடையும் சிநேகிதத்திலிருந்து இனி என்றும் பிரிக்கப்பட்டவனாக மாட்டேன். எ ன் லு ை- ய சிநேகிதத்திலிருந்து நீயும் பிரிக்கப் பட்டவளாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/316&oldid=580032" இலிருந்து மீள்விக்கப்பட்டது