பக்கம்:துளசி மாடம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி இ 19

இருந்த அம்மாவின் கவனத்தைக் கவர, நான்தான் ரவி வந்திருக்கேன்ம்மா- என்று கொஞ்சம்; இரைந்தே குரல் கொடுத்தான். ஆனால் அதற்குப் பதில் எதுவும்

இல்லை *

7

மறுபடியும் இரண்டாவது தடவையாக ரவி குரல் கொடுத்தபோது, எல்லாம் தெரியறதுடா ? சித்தே இரு. குளிக்காமேக் கொள்ளாமே உள்ளே வந்துடாதே...தோ வரேன்" என்று சமையலறைக்குள் இருந்து பதில் வந்தது. உள்ளே அம்மா தயிர்ப்பானையில் மத்தால் வெண் ணெய் கடைந்து கொண்டிருந்தாள் ஆயர் பாடியில் யசோதை தயிர் கடையும்போது சின்னக் கண்ணன் வெண்ணெய்க்காகத் தன் பிஞ்சுக் கையை நீ ட் டி க் கொண்டிருப்பது போன்ற வழக்கமான காலண்டர் ஒவியம் ஒன்றிலிருக்கும் யசோதையின் தோற்றத்தைப் போலத்தான் அம்மாவின் தோற்றமும் அப்போது அழகாக இருந்தது,

'நான் போயிட்டு அப்புறம் வரட்டுமா அம்மா ? ஸ்நானம் பண்ணிட்டு வந்தாத்தான் நீ பேசுவியா ?”

இருடா...வரேன்..." "எங்கிட்டே உனக்கென்ன கோபம் ?" "அதை என்னைக் கேழ்ப்பானேன்? நோக்கே தெரி யாதோ ?"

'நான் என்ன பண்ணிட்டேன் அப்பிடி ?"

என்னடா பண்ணனும் இன்னம் ?" அம்மாவுடைய மனஸ்தாபத்தின் கனம் முழுவதும் அந்த இன்னம்’ என்ற கடைசி வார்த்தையில் இறுகித் திரண்டிருப்பது ரவிக்குப் புரிந்தது. அப்பாகூட ஒரளவு ஒத்து வந்திருப்பது போல் அவனுக்குத் தெரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/81&oldid=579797" இலிருந்து மீள்விக்கப்பட்டது