உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

துளு நாட்டு வரலாறு

18 துளு நாட்டு வரலாறு என்றும் வருவனவற்றால் அறியலாம். நன்னர், வேள்குல அரசராவர். கொடுகூர் இவ்வூர் துளுநாட்டில் இருந்தது. நன்ன அரச ருக்குரிய இவ்வூரைச் சேரன் செங்குட்டுவன் வென்றான்.(பதிற்றுப் பத்து5-ஆம் பத்து பதிகம்.) வியலூர் இதுவும் துளுநாட்டில் இருந்த ஊர். 'நறவுமகிழ் இருக்கை நன்னன் வேண்மான் வயலை வேலி வியலூர்' 1 என்று இது கூறப்படுகிறது. இது கடற்கரைப் பக்கமாக இருந்த ஊர். இவ்வூரையும் செங்குட்டுவன் வென்றான். 'உறுபுலி யன்ன வயவர் வீழச் சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து என்று கூறுகிறது. நறவு கறிவளர் சிலம்பில் துஞ்சும் யானையிற் சிறுகுரல் நெய்தல் வியலூர் எறிந்த பின்' 3 சேரன் இது துளுநாட்டில் கடற்கரையிலிருந்த துறை முகப் பட்டினம். கள்ளுக்கு (மதுவுக்கு) நறவு என் றும் ஒரு பெயர் உண்டு. ஆகவே, நறவு என்னும் பெயருடைய இந்த ஊரைத் 'துவ்வா நறவு' (உண் 1. அகம். 97: 12-13 2. பதிற்றுப்பத்து 5ஆம் பத்துப் பதிகம் 3. சிலம்பு.நடுகல். 114-115