உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளு நாட்டு வரலாறு

27

துளு நாட்டு வரலாறு 27 வெள்ளைக்கடுகு போன்ற கற்களும் முருக்கம்பூ நிறம் போன்ற சிறுகற்களும் இருந்தன என்றும் மாவைக் கரைத்தது போன்ற நீர் இங்கு இருந்தது என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது. 'மங்கல மடந்தை கோட்டகத் தாங்கண் செங்கோட் டுயர்வரைச் சேணுயர் சிலம்பில் பிணிமுக நெடுங்கல் பிடர்ச்சிலை நிரம்பிய அணிகயம் பலவுள. ஆங்கவை யிடையது கடிப்பகை நுண்கலும் கவிரிதழ்க் குறுங்கலும் இடிக்கலப் பன்ன இழைந்துகு நீரும் உண்டோர் சுனை. அதனுள்புக் காடினர் பண்டைப் பிறவியர் ஆகுவர்.* (கடிப்பகை நுண்கல்-வெண் சிறு கடுகு போன்ற நுண்ணிய கல். கவிர் இதழ்க் குறுங்கல்- முருக்கம்பூப் போன்ற நிறத்தையுடைய குறிய கல். இடிக் கலப்பன்ன-மாவைக் கரைத்தா லொத்த. அரும்பதவுரை.) சங்க இலக்கியங்களி லிருந்து அறியப்படுகிற துளுநாட்டு ஊர்களையும் இடங்களையும் இது காறும் அறிந்தோம். இனி, சங்க இலக்கியங் களிலிருந்து அறியப்படுகிற நன்ன அரசருடைய வரலாற்றைப் பார்ப்போம். . சிலம்பு. வரந்தரு.53-60