உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

துளு நாட்டு வரலாறு

34 துளு நாட்டு வரலாறு படாமல் அப்பெண்ணைக் கொன்று விட்டான். இக் கொடுஞ்செயலினால் மக்கள் அவனை வெறுத்துப் 'பெண் கொலை புரிந்த நன்னன்' என்று தூற்றி னார்கள். இச்செய்தியைப் பரணர் என்னும் புலவர் கூறுகிறார். 'மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு ஒன்பதிற் றொன்பது களிற்றொடு அவள் நிறை பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான் பெண்கொலை புரிந்த நன்னன் போல வரையா நிரையத்துச் செலீஇ யரோ * இக்கொடுஞ்செயலினால் இவன் மீது வெறுப் படைந்தனர் கோசர் என்னும் இனத்தார். போர்த்தொழில் செய்பவர். அவர்கள் ஏதோ சூழ்ச்சி செய்து நன்னனுடைய மாமரத்தை வெட்டி விட்டனர். கோசர் அரசனுடைய மாமரத்தை அவனுடைய ஆட் சிக்குட்பட்ட மக்கள் வெட்டினார்கள் என்றால், அச் செயல் அரசனை அவமானப்படுத்தும் செயலாகும். கோசர் ஏதோ காரணத்தைக் கண்டு பிடித்து அக் காரணத்தை ஆதாரமாகக் கொண்டு நன்னனு டைய மாமரத்தை வெட்டி விட்டனர். யையும் பரணரே கூறுகிறார். 'நன்னன் நறுமா கொன்று ஞாட்பிற் போக்கிய ஒன்று மொழிக் கோசர் போல இச்செய்தி வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே' (குறிப்பு: இச்செய்யுளில் ‘நறுமாகொன்று' என்று இருப்பதைத் தவறாகப் பொருள் செய்து

குறுந்தொகை. 292: 1-5 குறுந்தொகை. 73 : 2-5.