துளு நாட்டு வரலாறு
51
துளு நாட்டு வரலாறு VA D Ne651 நாட் சென்று எதிர்த்தான். சேரன் செங்குட்டுவன் துளு டின் மேற்குக் கடற்கரையோரமாகச் துளுநாட்டை எதிர்த்தான். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் துளுநாட்டின் கிழக்குப் பக்கத்தை வடகொங்கு நாட்டில் (புன்னாட்டில்) இருந்து எதிர்த்தான். ம் இப்போர் நிலைச்செருவாகச் சிலகாலம் நடந் தது. இந்த மும்முனைப் போரில் நன்னன் இரண்டாவன் தோல்வியடைந்தான். நன்னனும் அவனுடைய சேனாதிபதியாகிய மிஞிலி யு போரில் இறந்துபோனார்கள். இப்போர் கடம்பின் பெருவாயில் (வாகைப் பெருந்துறை) என்னும் இடத்தில் நடந்தது. இரண்டாம் போர் நார்முடிச் சேரலுக்கு முழுவெற்றியாக இருந்தது. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், தான் இழந்திருந்த பூழி நாட்டை மீட்டுக்கொண்டதோடு துளுநாட்டையும் தனக்குக் கீழ்ப்படுத்தினான். நார்முடிச் சேரல் துளு நாட்டுப் போரில் அடைந்த வெற்றியைப்பதிற்றுப் பத்து 4-ஆம் பத்து இவ்வாறு கூறுகிறது. "ஊழின் ஆகிய உயர்பெருஞ் சிறப்பிற் பூழிநாட்டைப் படையெடுத்துத் தழீஇ உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை நிலைச் செருவின் ஆற்றலை யழித்து அவன் பொன்படு வாகை முழுமுதல் தடிந்து குருதிச் செம்புனல் குஞ்சரம் ஈர்ப்பச் செருப்பல செய்து செங்களம் வேட்டு. 108743 MARRAS 'பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன். சுடர்வீ வாகைக் கடிமுதற் றடிந்த தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்'
பதிகம்.5-11 † 4 ஆம் பத்து 10: 14-16