துளு நாட்டு வரலாறு
5
முகவுரை கொங்கண நாடு என்றும் துளு நாடு என்றும் தமிழ்ச் சங்க காலத்துத் தமிழ் இலக்கியங்களிலே கூறப்படுகிற நாடு அக்காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாக இணைந்திருந்தது. இன்றைய கேரள நாடா கிய பழைய சேர நாட்டுக்கு வடக்கே தென் கன்னட மாவட்டம் என்னும் பெயருடன் இருப்பதுதான் பழைய துளுநாடு. தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த பழைய சேரநாடு பிற்காலத்திலே மலையாள நாடாக மாறித் தனியாகப் பிரிந்து போய் விட்டது போலவே பழைய தமிழகத்துடன் இணைந்திருந்த துளுநாடும் பிற்காலத்திலே பிரிந்து தனியாகப் போய் விட்டது. ஆனால், பழைய சங்கத் தமிழ் இலக்கியங்கள் துளு நாடுதமிழகத்துடன் கொண்டிருந்த உறவை நினைவூட் டிக் கொண்டிருக்கின்றன. அகநானூறு, புறநானூறு, நற்றிணை நானூறு குறுந்தொகை நானூறு,பதிற்றுப்பத்து,சிலப்பதிகாரம் முதலிய நூல்களிலே சில செய்யுள்களில் துளு நாட் டைப் பற்றிய செய்திகள் தற்செயலாகக் கூறப்பட் டுள்ளன. அச்செய்திகள் தற்செயலாகப் புலவர்களால் கூறப்பட்டவை. ஆகவே, அக்காலத்துத் நாட்டின் முழு வரலாறு அச் செய்யுள்களில் கிடைக்க வில்லை. கிடைத்துள்ளவை வரலாற்றுத் துணுக்குகளே யாகும். துளு சங்கச் செய்யுள்களிலே ஆங்காங்கே சிதறிக் கிடக் கிற அவ்வரலாற்றுத் துணுக்குகளையெல்லாம் ஒன்றா கத் திரட்டித் தொகுத்து முறையாக வகைப்படுத்தி எழுதப்பட்டதுதான் துளுநாட்டு வரலாறு என்னும் இச்