பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

2. ஒ ள ைவ ய | ர்

சங்க காலத்தில் கடை எழுவள்ளல்கள் என்று குறிப்பிடத்தக்கவர்கள் பாரி, ஒரி, ஆய் அண்டிரன், திருமுடிக்காரி, நள்ளி, நெடுமான் அஞ்சி, பேகன் என் பவர்கள். இவர்களுள் ஒருவன் நெடுமான் அஞ்சி என் பவன். இவன் அதிகமான் நெடுமான் அஞ்சி எனவும், அதிகமான் தகடூர் பொருதவி ழ்ந்த எழினி என்றும் அழைக்கப்படுபவன். இவன் போரை விரும்பும் பொலங்கொள் தோளினன். போருக்குச் சென்ருல், பெரிதும் வெற்றியுடன் திரும்பும் வீர தீரன். சேரன், சோழன், திதியன், எருமையூரன், இருங்கோ வேண் மான். பாண்டியன், பொருகன் என்னும் எழுவரையும் வென்ற வெற்றி வீரன். இவன் மழவர் குடிக்குத் தலை வனுக விளங்கியவன். தகடுருக்குத் தலைவன். குதிரை மலேயும் இவனுக்கு உரியதே. இவனுக்கு வெட்சி மாஃபி அடையாள மாலையாகும். வேங்கை மலரும் அ.விளங் கண்ணியும் குடும் குரவைான். இவன் சேர மன்னர் மரபின் தொடர்புடையவன் என்று கருதப் படுவதால், அம்மரபினர் மாலையாகிய பனந்தாரினே யும் பாங்குற அணியும் பார்த்திபன் ஆவான்.