பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

கண்டு உரைக்கவும் கூடும் என்று உளம்கொண்டு. தன் படைக்கலக் கொட்டிலைக் காட்ட அழைத்துச் சென்றனன்.

ஒளவை மூதாட்டியார், படைக்கலங்கள் பலவும் புதியனவாகச் செய்யப்பட்டுக் கைப்பிடிகள் நல்ல உறுதியுடையனவாக அமைக்கப்பட்டு முனைகள் யாவும்: கூர்மையுடையனவாய் இருக்கப்பெற்று நெய்யும் பூசப் பட்டு, மாலைகளும் சூட்டப்பட்டு இருக்கின்ற நிலையினை கன்கு கண்டனர். ஒளவைப் பெருமாட்டியார் இது சமயம் தாம் வந்த கருத்தை அறிவிப்பதற்கும், தொண்டைமான் இளந்திரையன் படைவன்மையின் செருக்கை அடக்குதற்கும் என்று உளம்கொண்டு, " தொண்டைமான் இளந்திரைய! கின் படைக்கலம் கண்டு பெருமகிழ்வு கொள்கின்றேன். உன் படைக் கலங்கள் போர்முனே காணுதனவாய், கூர்மழுங்காமல், கைப்பிடிகள் தளராமல், மாலையணிந்து நெய் தடவப் பட்டு அலங்காரமாகப் படைக்கலச் சாலையில் கட்டு டன் இருக்கின்றன. ஆல்ை, அதிகமான் நெடுமான் அஞ்சியின் படைக்கலங்களோ எனில், போரில் மிகுதி யும் பயன்பட்டுப் பகைவர் உடலில் புகுந்து இரத்தக் கரை தோய்ந்து முனைகளில் தசைகள் பற்றப்பட்டுக் கைப்பிடி கள் தளர்ந்து கூர்மழுங்கி மீண்டும் போருக் குப் பயன்படும் நிலையினைப்பெறக்கொல்லனது உலைக் களத்தில் செம்மைபெறக் கிடக்கின்றன என்பதை,