பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

தனர். அசுரர் அடைப்பை தாங்கி நின்றனர். கடவு மாதர் நடனமாடிக் கொண்டிருந்தனர். பஞ்சகருவிகள் இசையினை இசைத்துக் கொண்டிருந்தன. இந்த கினை யில் இன்புடன் இருந்த சூரபதுமன்முன் வீரவாகு தேவர் தோன்றினர். அவன் தனக்கு ஒர் ஆதனம் அளிப்பதற்குத் தாமதம் செய்யவே இறைவன் அரு ளால் ஒர் ஆதனம் அங்கு வரப்பெற்று அதனிடை அமர்ந்தார்.

சூரபதுமன்முன் வீரவாகுதேவர் இறுமாப்புடன் வீற்றிருந்ததைக் கண்ட அவையினர் பலவாறு சிந்தனை செய்தனர். சூரனுக்கும் வீரவாகுதேவர் தன் முன் சிறிதும் அஞ்சாது வீற்றிருந்தது குறித்துப் பெருஞ் சினம் எழுந்தது. " சிறிதும் அஞ்சாது என்முன்அமர்க் திருக்கும் நீ யாவன்? சொல்லுக ' என்று கேட்டனன் சூரபதுமன்.உடனே வீரவாகுதேவர் சிறிதும் அஞ்சாது, " நான் குமாரக் கடவுளால் அனுப்பப்பட்ட தாதன். என் பெயர் வீரவாகு என்பது. உனக்கு கல்புத்தி கூறி நீயும் உன்னைச் சார்ந்தவர்களும் பிழைத்து நல் வாழ்வு வாழத் தேவர்களையும் சயந்தனையும் சிறை நீக்குமாறு கூறி புத்தி புகட்டி வருமாறு என்னை அனுப்பியுள்ளார்”என்றுகூறித்தாம்வங்ககாரணத்தை அறிவித்தனர்.

மெய்மை நீங்கியே கொலைகளவு

இயன்று மேல்உள்ள