பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறக்கம் தந்த ஒவியம் "கோபால், உனக்குத் தூக்கம் நன்ருக வகு கிறதா?" என்று கேட்டான் கண்ணப்பன். 'ஏன், நான்தான் கும்பகர்னனுக்கு மூத்த பிள்ளையாய் விட்டேனே! தினமும் காலையிலே எட்டு மணிக்கு நீ தொந்தரவு செய்யாவிட்டால் நான் எழுந்திருக்கிறது ஏது?’ என்று பதில் கொடுத்தான் கோபாலன். "நீ இரவிலே உறங்குவதைத் தவிர வேறு ஒன் ஆமே செய்வதில்லையா?' என்று மறுபடியும் கண்ணப் பன் கேட்டான். "உன் கேள்வி வேடிக்கையாக இருக்கிறதே! உறங்கும்போது வேறு என்ன செய்யமுடியும்? நான் கனுக்கூடக் காண்பதில்லே' என்று கோபாலன் சொல்லிக்கொண்டே, அன்றைய செய்தித் தாளைப் புரட்டினன். கண்ணப்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கோபா லன் சொல்லுவதென்னவோ மெய்தான். இருந்தாலும் சென்ற சில நாட்களாக அவன் இரவிலே படுக்கையை விட்டெழுந்து பல மணி நேரம் ஓவியம் தீட்டுவதைக் கண்ணப்பன் கவனித்து வருகிருன். முதலில் ஓரிரண்டு தடவை தற்செயலாக விழித்து இதைக் கவனித்தபோது கண்ணப்பனுக்கு ஆச்சரியம் ஒன்றும் ஏற்படவில்லை. துக்கம் வராததாலோ அல்லது திடீரென்று ஏதாவது ஒரு புதிய கற்பனை தோன்றியதாலோ இரவிலே ஓவியம் தீட்டுகிருன் என்று எண்ணிக்கொண்டான். ஆணுல்