பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னேற்றம் சென்ற நூற்ருண்டிலே மனித சமூகம் அடைந் துள்ள முன்னேற்றத்தைப் பற்றிச் சில ஆண்டுகளுக்கு ஒருவர் ஒரு நூல் எழுதினுர் மகத்தான முன் ாேற்றங்கள் ஏற்பட்ட நூற்றுண்டு ' என்று அந்த து லுக்குப் பெயர். அந்த மனிதர் வெகு சிரமப்பட்டுப் போன நூற்ருண்டிலே உண்டான விஞ்ஞான வார்ச்சி, தொழில் வளர்ச்சி, கலை வளர்ச்சி என்றிப்படி எல்லாவற்றையும் குறித்துப் பக்கம் பக்கமாக வரைந்து தள்ளி, அந்த முன்னேற்றத்தின் மகத்தான தன்மையை நிலைநாட்ட முயன்றிருக்கிருச். அவர் எடுத்துக்கொண்டிருக்கும் சிரமத்தைக்கண்டு பெர்குட்ஷாவுக்கு மனமிளகிப் போய்விட்டதாம். "ஐயோ பாவம் அந்த மனிதன் அத்தனைத் துன்பப் பட்டிருக்க வேண்டிய தேவையே இல்லையே! மனித சமூகத்தின் முன்னேற்றத்தை மிக எளிதாக ஒரே வாக்கியத்தில் கூறி நிலைநாட்டி விடலாமே என்று அவர் அங்கலாய்த்தாராம். மனித சாதியின் முன்னேற் றத்தைப் பற்றி அவர் சுருக்கமாகக் கூறுவதாவது: " காட்டுமிராண்டியாகத் திரிந்த ஆதிக்கால மனிதன் பிறரைக் கொல்ல நஞ்சு தோய்ந்த அம்பை ஏவினுன்; நாம் இன்று நச்சு வாயுவை ஏவுகிருேம்; இதுதான் தமது முன்னேற்றம் ' என்கிருச் அவர். சற்று ஊன்றிப் பார்க்கப்போளுல் பெர்ணுட்ஷா சொல்லுவது ஒரு வகையில் உண்மைதான் என்று.