பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணுதல் போல புத்தனும் இயேசுவும் பிறந்த இப்பாரினில் இத்தனை கொடுமைகள் எப்படி முளைத்தன? உலகம் உயிர் பெறவே உயிரீந்தான் கிறிஸ்துமுணி: உலகம் உய்கென்றே உயர்புத்தன் தான் துறந்தான். அவர்தம் பொன்மொழி அனைவரும் கேட்கவே புவியினிற் காந்தியும் புகன்றிட வந்தனன்:அனைவரும் இன்பமே ஆசையுற்றிருந்தும் நினைக்கவும் நெஞ்சம் நெக்குறும் தீமைகள் யாவனே செய்குவன்? யாண்டும் தீமையாய் ஆவன இன்பம் அளிக்குமோ ஐயகோ! நஞ்சினைப் பாய்ச்சி நல்லமு துண்னவோ? நஞ்சினை யேற்றே மற்றவர்.அமுதுணக் கண்ணுதல்போல எண்ணலே மேன்மை; விண்ணுல கன்றே தழைந்திடும் திண்ணமே.