பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமான் உருவெடுக்கா துள்ளத்தில் உதித்தவிந்த ஓவியமோ ஒளியறியாப் ப்கற்பொழுதோ ஊற்றில்லாப் பாழ்கினருே தருவுடுக்கா மணற்பாழோ தண்மையிலாக் கருநிலவோ தமியேனின் வாழ்விதற்குச் சாற்றிடவோர் உவமையுண்டோ ? சிறகிழந்த இளம்புறவைச் செந்தீயில் போட்டது போல் சிறுதாலித் தளையிட்டுச் சிறையிந்த வீட்டில் வைத்தார் ; நறவிழந்த சந்தனமாய் நானுள்ளேன் இந்நாட்டு நளாயினியை அருந்ததியை நாளெல்லாம் எண்ணியெண்ணி :பிணிப்புண்ட மான்குட்டிப் பேதையுளம் காலொடித்தேன்; பெருகியெழும் கிளர்ச்சியனல் பெண்மைநிறைக் கடலவித்தும் மணத்தறியால் எனக்கட்டி வாழ்வொடித்தார் கிழக்குறட்டை 194