பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மறைந்த ஜோதி



என்றந்தக் குரல் கேட்போம்
இளஞ்சிரிப்பில்மகிழ்ந்திடுவோம்?
கன்றியுளம் நைந்தோம்
கதிகலங்கி வாடுகின்றோம் :-

என்றாலும் சோதரரே
எண்ணம் துணிந்திடுவீர்
சிந்தை கலங்காதீர்
செயலற்று நிற்காதீர்;

தந்தையவன் சாவானோ
சாவுமவனைத் தொடுமோ?
என்று மவன் வாழ்ந்திடுவான்
எம்மிடையே தங்கிடுவான்.

பொன்னுடல்தான் போயிடினும்
புகழுடம்பில் வளர்ந்திடுவான்:
நூறாண்டு வாழ்ந்திடினும்
நூற்றிருபத் தைந்தெனினும்

மாறாயியற்கை யிது
மண்பாண்டம் வீழ்ந்திடுமால்:-
நூறாண்டு சென்ற பின்னர்
நூறு மடங் கோங்கியவன்.

மாறா இளமையுடன்
வாழ்ந்திருக்கக் காண்பீரே.
ஆதலினால் வாடாதீர்
ஆறிமனம் தேறிடுவீர்.

சோதரரே காந்தியினைத்
தூய்மையுடன் நெஞ்சகத்தில்
வீற்றிருக்கச் செய்வீரே
மேலோன் உபதேசம்

49