பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அறிவு தெளிந்தேன்

தள்ளி இந்தக் கலக்கத்தை விட்டு நீ

   தளர்வி லாமல்உழைத் திடு 
   வாயெனக் 

கொள்ளை கொள்ளும் நகைதவழ் பேச்சினில்

   கூறினனந்த ஞானப் பொலி
   வினன்.

கூடி யாரும் உழைத்திடவந்திடார்:

   குறும்பு பேசித் தடைபல 
   சூழுவார்; 

தேடில் எங்கணும் வீண்பழிச் சொல்லலால்

   சிறிதும் இல்லை உதவியென் 
   றேதினேன். 

கோடி இன்னல்கள் வந்திடும் என்றுநீ

   குறுகி நின்று கணக்கிடு 
   வாயெனில் 

நாடி இன்னும் அநேகம் குவிந்திடும்

   நன்மை காணல் அரிதெனச் 
   செப்புவான்; 

அச்சம் நீங்கித் தயக்கமும் தள்ளிநீ

   ஆண்மை யோடுமுயன்றிடும் 
   போதினில் 

துச்சமாகும்எதிர்ப்பும்பகைமையும்;

   தோழ ராகப் பலர்வந்து 
   கூடுவார்; 

மெச்சி யுன்றன் பணியினில் சேருவார்;

   வெற்றி காணலாம் நிச்சயம்; 
   ஆதலால் 

கச்சைகட்டிப்புறப்படுவாயென்றான்

   கலக்கம் நீங்கி அறிவு 
   தெளிந்ததே.


             93