பக்கம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வர்மா யாட்டின் சிறப்பிற்கும் காட்டாகும். 83 இக்கோயில் சிறந்ததோர் எடுத்துக் இந்நாட்டுத் தமிழரிடையே, முருகவழிபாடு முக்கியத் துவம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது. பசுமந்தான் எனும் இடத்தில், நகரத்தார் தண்டாயுதபாணி கோயிலை எடுப்பித் துள்ளனர். தட்டோனில் தண்டாயுதபாணியின் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மோல்மோனில் சிவன் கோயில் ஒன்று சிறப்புற்று விளங்குகிறது. இக்கோயில்களில் எல்லாம் நாள் வழிபாடும், திருவிழாக்களும் செம்மையாக நடத்தப்பட்டு வருகின்றன. திருவிழாக்களில் இயல், இசை, நாடகமாகிய முத்தமிழும் அங்குள்ள தமிழர்களால், போற்றி ஆதரிக்கப்படு வதை இன்றும் காணலாம். தமிழர்கள், பர்மாவில் கொண்டாடும் இத்திருவிழாக்களுள் பௌத்த குருமார்களும் கலந்து கொள்கின்றனர். 'தீமிதிப்பு'ப் போன்ற சடங்குகளிலும் அவர்கள் நேரடியாகவே பங்கு கொண்டு, வழிபாடும் செய்து வருகின்றனர். தேரில் முருகப் பெருமான் ஊர்வலம் வரும் பொழுது. பர்மிய மக்கள் தட்டுகளில் தீபாராதனைப் பொருள்களை ஏந்திய வண்ணம் தங்கள் வீட்டு வாசல்களில் காத்து நிற்கின்றனர்; தங்கள் வீட்டுற்கு நேராகத் தேர்வந்தவுடன் அர்ச்சனை ஆராதனை செய்து, திருநீற்றைப் பெற்று, நெற்றியில் வழிபாட்டுணர் வோடும் பக்தியுணர்வோடும் அணிந்து கொள்கின்றனர். இந்த அளவிற்குத் தமிழரின் சமய வழிபாட்டில், பர்மிய மக்கள். பேரீடுபாடு கொண்டுள்ளனர். தமிழ்ப்பணி 1965-ஆம் ஆண்டிற்கு முன்னர் 'அகில பர்மா தமிழ்ச் 'சங்கம்', செட்டியார் உயர்நிலைப்பள்ளி, 'கம்பை தனவைசியர் கல்விக் கழகம்' போன்ற அமைப்புகள் தமிழ் வளர்ச்சிக்கு ஆக்சு மும் ஊக்கமும் அளித்துவந்தன. பர்மாவின் தி. மு. கழகமும் தமிழின் மறுமலர்ச்சிக்கும், தமிழ் மக்களின் விழிப்புணர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றியது. தமிழ் நாளிதழ்களும், வார இதழ்களும் கூட இங்கு நடத்தப்பட்டன. இப்பொழுது கல்விக் கூடங்களை அரசு எடுத்துக் கொண்டு விட்டது. ஆங்கிலமும் தேசியமொழியாகிய பர்மிய மொழியுமே இன்று, பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழரின் கலைக் கழகங்களும் சமய நிறுவனங்களுமே தமிழை வளர்த்து வருகின்றன. இந்த அவல நிலையை மாற்றுவதற்கு மதுரையில் தொடங்கப்படும் 'உலகத் தமிழ்ச் சங்கம்' முயல வேண்டும்.