பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீழ்ச்சியும் மீட்சியும் 287 வங்காள விரிகுடாத் தீவுகளும், வடக்கே இமயமும் என விரிவுற்று விட்டது. புற எல்லை மேலைச் சாளுக்கியர் ஆண்ட பகுதி மட்டுமே; தெற்கே பாணடியரும் அவர்கள் தூண்டு தலால் அடிக்கடி கிளர்ந்தெழுந்த சேரரும் ஈழ மன்னரும் பெரும் பேரரசுக்கு ஒரு முள்ளாகச் செயலாற்றி யிராவிட் டால், இந்த மேலைச் சாளுக்கியப் பரப்பும் தென்திசை பெரும் பேரரசில கட்டாயம் இடம் பெற்றிருக்கும் என்று உறுதியாகக் கூறலாம். ஏனெனில் பேரும் பேரரசுக் காலத்திலேயே தமிழகப் பக்தி இயக்கம் அத்திசை கடந்து வடக்கே செல்லத் தொடங்கியிருந்தது, சோழப் பெரும் பேரரசர் காலத்திலேயே கன்னட தெலுங்கு மொழிகள் இலக்கிய வளம் பெறத் தொடங்கி யிருந்தன. ஆனால் சோழப் பெரும் பேரரசர் அவைப் புலவோர் அவர்களைத் தமிழில் பாடினர்; மேலைச் சாளுக் ருக்கிய விக்கிரமாத்தனின் அவைப் புலவா பில்ஹணன் அவனைச் சமஸ்கிருதத்திலேயே பாடினான். அத்துடன் தமிழர் பாடல் கள் வரலாற்றுக்குப் பயன் படுவது போல, தென்னாட்டுப் பில்கணன் சமஸ்கிருத காவியமோ (விக்கிரமாங்க சரிதம்). வடதிசைப் பட்ட பாணன் காவியமோ (ஹர்ஷ சரிதம்) வரலாற்றுக்குப் பயன்படவில்லை இரண்டுதிசைப் பேரரசு களின் இரு திசைப் பண்பாடுகளின் போக்கை இவை காட்டு வனவாகும். பல்லவர் காலத்திலும் சோழப் பெரும் பேரரசர் காலத் திலும் தமிழகப் பேரரசுப் படைகளும் சாளுக்கிய பேரரசுப் படைகளும் சந்தித்துப்போராடிய போர்க்களங்களில் மிகப் பல துங்கபத்திரை ஆற்றங்கரையிலோ அல்லது கிருஷ்ணை யாற்றங்கரையிலோதான் நிகழ்ந்தன. அப்போர்களிடையே அடிக்கடி கை மாறி வந்த புயற்களம் இரண்டு ஆறுகளுக்கும் இடையேயுள்ளபகுதி ஆகும். இது இன்று பம்பாய் மாகாணத் தில் இரேயச்சூர் மண்டலம் என்ற பெயருடன் நிலவுகிறது. பல்லவ சோழா காலத்தில் இது கல்வெட்டுகளில் இடைதுறை நாடு இரண்டாயிரம் என்றும், விசய நகரப் பேரரசர் காலத்திலிருந்து இரேய்ச்சூர் இடை நிலம் (Raichur Doab} என்றும் அழைக்கப் பட்டது. 14 - முதல் 16 -ம் நூற்றாண்டுகள் வரை இப்பகுதியே விசய நகரப் பேரரசுக்கும், அதன் வடக்கி லுள்ள பாமினிப் பேரரசுக்கும் இடையேயுள்ள போர்ப்புயல் களமாய் இருந்தது. அது போலவே 18-ம் நூற்றாண்டில் இவ்விடம் தென் திசையில் மைசூர் பேரரசுக்கு வடதிசை