உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19-5-1983 சென்னை ஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில், கலைஞரின் 'தென்பாண்டிச் சிங்கம்' நூல் வெளியீட்டு விழாவில் தமிழறிஞர்களின் பாராட்டு! பேராசிரியர் அன்பழகனார்: இந்தக் கதையில் எத்தனை விதமான கருத்தோடடங்கள் இடையிடையே புகுத்தப்பட்டிருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்கிறபோது, இந்தக் கதையைத் தொடர்ச்சியாகப் படிக்கின்ற ஒரு ஆர்வம் ஏற்பட்டது. 'தென்பாண்டிச் சிங்கம்' மிகச் சிறந்த ஒரு புதினம் என்பதை நான் உணர்கிறேன். கதைகள் படிக்கிறபோது சில கதைகளில் - புதினங்களில் வருணனைகள் அதிகமாக வருகிறபோது. சில பக்கங்களை இடையிலே புரட்டித் தள்ளிவிட்டால் போதும் என்று தோன்றும். ஆங்கிலத்திலேயும் சில புதினங்கள் . அப்படி இருக்கின்றன அதுபோல் தமிழிலும் சில அப்படி இருக்கின்றன. சுவை சற்றும் குன்றா அளவறிந்த வருணனைகள்! பக்கங்களை நிரப்புவதற்காகப் புதினங்கள் எழுதுகிற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் வர்ணனைகளை ஆர்வத்தோடு சிலர் படிக்கிறார்கள் என்பதற்காக வர்ணனையையே வளர்த்துக்கொண்டு போய் காவிரிக் கரையில் ஒரு படை வருகிறது என்றால். அந்தக் கரையிலே உள்ள ஊர்களையெல்லாம் கூட-புராணங்களைப் போல - வர்ணிக்கிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட எழுத்துக்களைப் படிக்கிறபோது ஒரு வகைச் சோர்வு தட்டும்.