உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கலைஞர் மு. கருணாநிதி "வந்துள்ளது மிஸ்டர் வெள்ளை, வந்துள்ளது! ஜல்லிப்பட்டி விருப்பாட்சி பாளையக்காரரான கோபால நாயக்கரும், அவரது மகன் முத்துவேல் நாயக்கரும் மருதுபாண்டியர்களுக்கு நெருங்கிய பக்கபலமாக இருந்து அம்பலக்காரர்கள் பலருடனும் இரகசியத் தொடர்பு கொண்டு ஆங்கிலேயப் படையை எதிர்க்க மிகப் பெரிய ஆயத்தங்களைச் செய்து வருகிறார்கள்! அப்படித் தொடர்பு கொள்ளப்படும். அம்பலக்காரர்கள் பட்டியலில் பாகனேரியும் பட்டமங்கலமும் கூட உண்டு இல்லையா?" "அதெல்லாம் எனக்குத் தெரியாது! எனக்குத் தெரிந்ததெல்லாம் நீங்கள் சொன்னீர்களே, கோபால நாயக்கர்; அதாவது விருப்பாட்சி ஜல்லிப்பட்டி பாளையக்காரர் - அவர், அந்த விடுதலை வீரர்கள் மத்தியில் மதுரை நாயக்கர் என்று அழைக்கப்படுகிறார். மதுரையிலே பழைய மாளிகையொன்றில் ஒரு பாசறையும் அமைத்திருக்கிறார்கள். அங்கு நடைபெற்ற வீரர்கள் போட்டியில்தான் கறுத்த ஆதப்பன் விருது பெற்றான். அந்த நிகழ்ச்சிக்கு நான் கூடப் போயிருந்தேன்.' "ஏன் மிஸ்டர் வெள்ளை, உண்மையில் பாதியை விழுங்குகிறீர்? மருது பாண்டியரிடத்திலும், மதுரை நாயக்கர் என்றீரே, அந்தக் கோபால நாயக்கரிடத்திலும் அவர்கள் கூட்டத்தைச் சேர்ந்த புரட்சிக்காரர்களான ஊமைத்துரை, செவத்தையா, ஞானமுத்து, முத்துவீரன், வீரப்பன், சிவஞானம், சீராள முத்தரையர், உதயணன், கனகசபாபதி, உலகநாத உடையார், உத்தமநாதப் படையாச்சியார், கடலகுடி குஞ்ச நாயக்கர், பூபதி நாடார். பூசாரி நாயக்கர், கோமி ரெட்டி, பெருமாள் சாமி பிள்ளை, கல்யாணத் தேவர், தோமாச்சி முதலியார், எல்லப்ப முதலியார், உதயபெருமாள் கவுண்டர் போன்றவர்களிடத்