உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கலைஞர் மு. கருணாநிதி 'வாளுக்கு வேலித் தேவர் வாழ்க! என்று முழக்கம் வேறு எழுந்து விட்டது. பந்தலில் இருந்தோரை அமைதிப்படுத்தி வணங்கியவாறு வாளுக்குவேலி முன் வரிசையில் வந்து அமர்ந்து நடனத்தைக் கண்டு களிக்கத் த.யாரானார்! திடீரென ஏற்பட்ட அமளியால் சுந்தராம்பாளின் முகம் தீப்பந்தமாகி விட்டது! இருந்தாலும் சமாளித்துக் கொண்டு அடுத்த கட்டமாகக் குறத்தி நடனத்தை வடிவாம்பாளுடன் தொடங்கினாள். அப்போதும் பந்தலில் அமைதியில்லை. ஒவ்வொருவராக எழுந்து வந்து வாளுக்கு வேலிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டுச் சென்று கொண்டேயிருந்தனர். சிலர் வாளுக்குவேலியையும் ஆதப்பனையும் சூழ்ந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகளை சரமாரியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். கண்டு தனது இலை புறக்கணிக்கப்படுவது சினங்கொண்ட சுந்தராம்பாள் நடனத்தில் அதிக அக்கறை காட்டாமலே ஆடி முடித்துவிட்டுத் தங்கையுடன் ஒப்பனை அறைக்குச் சென்று விட்டாள்! சுந்தராம்பாளைச் சந்திக்க வேண்டிய காரணத்தைச் செட்டியாரிடம் சொல்லி, அவரையும் ஆதப்பனையும் அழைத்துக் கொண்டு, வாளுக்குவேலி ஒப்பனை அறைக்குச் சென்றான். "சுந்தரி! வடிவு! யார் வந்திருக்கா தெரியுதா? பாகனேரி அம்பலக்காரர் உங்களைப் பார்க்க வந்திருக்கார்" உணர்ச்சியற்ற மரப்பதுமைக்கு விசை கொடுத்துக் கைகளைத் தூக்க வைத்தது போலச் சுந்தராம்பாள் ஒரு வணக்கத்தைச் சொன்னாள்!