உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்குப் பக்கபலமாக அந்தநேரம் பார்த்து வெள்ளை அய்யரும் வந்து சேர்ந்தார்! "என்ன லலிதா! சௌக்கியமோ? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு!" என்று லலிதாங்கியிடம் ஒரு அசட்டுச் சிரிப்புடன் நின்றார். அவருக்கு மரியாதை காட்டுகிற வகையில் சுந்தரியும் வடிவும் எழுந்து "வாங்க சுவாமிகளே!" என்று வணக்கம் தெரிவித்தனர். "எல்லாம் கேள்விப்பட்டுத்தான் வந்திருக்கிறேன். ஒரு பக்கத்திலே கும்பினிக்காரனுக்கும் மருது பாண்டியருக்கும் போராட்டம்! அது என்ன ஆகுமோ! எப்படி முடியுமோ, தெரியாது! அதற்கிடையில் வாளுக்கு வேலித் தேவருக்கும் சுந்தராம்பாளுக்கும் ஒரு போராட்டமா? இது நல்லாயில்லையே! வாளுக்கு வேலிக்கு எவ்வளவோ பிரச்சினை சமீப காலமா கர்னல் அக்னியூ ஒருகண் வச்சிருக்கிறான் அவர்மேலே! அவர் இங்கிலீஷ்காரர்களையும் வெளிப்படையாக விரோதிக்க முடியாது! அதற்காக விடுதலைப் போராட்டம் நடத்து கிறவர்களையும் விட்டுவிட முடியாது! இந்த மாதிரி நிலைமையிலே அந்த மனிதர், கயிற்றின் மேலே நடந்து கொண்டிருக்கிறார். அத்தனை பிரச்சினைகளுக் கிடையிலே அவருக்கு அவர் தங்கை கல்யாணி நாச்சியார் ஒரு பெரிய பிரச்சினை[ தங்கை மேல் அவருக்கு உயிர்! இல்லாவிட்டால் சுந்தராம்பாளைத் தேடிக்கொண்டு அவ்வளவு பெரிய அம்பலக்காரர் வருவாரோ?'" வெள்ளை அய்யரின் பேச்சு ஏற்கெனவே தெளிந்து கொண்டிருந்த சுந்தராம்பாளின் மனத்தில் மேற் கொண்டும் தெளிவை ஏற்படுத்தி வாளுக்குவேலியின் மீது ஒரு தனி மதிப்பையும், அனுதாபத்தையும் உருவாக்கியது! இருந்தபோதிலும் அவளே வலுவில் சென்று வாளுக்கு வேலி வீட்டில் கல்யாணி நாச்சியா ருக்கான நாட்டியப் பயிற்சியை ஆரம்பிப்பது அவளது