உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கலைஞர் மு. கருணாநிதி பல பல ஊர்கள் சேர்ந்தது ஒரு நாடு எனவும், பல நாடுகள் சேர்ந்தது ஒரு கோட்டம் எனவும், கோட்டங்கள் சேர்ந்தது ஒரு மண்டலமெனவும், பல நாடுகள் சேர்ந்தது ஒரு வளநாடு எனவும், பல வள நாடுகள் சேர்ந்தது ஒரு மண்டலமெனவும் வழங்கப் பெற்றன. காசா நாடு, கோனூர் நாடு, தென்மை நாடு, கன்னந்தங்குடி நாடு, உரத்த நாடு, பைங்கா நாடு, பாப்பா நாடு. அம்பு நாடு, வல்வநாடு, வாராப்பூர் நாடு, மீசெங்கிளி நாடு, மேலைத்துவாகுடி நாடு போன்ற நாடுகள் சோழ மண்ணில் விளங்கியது போலவே பாண்டி நாட்டிலும் கள்ளர் நாடுகள் பரவிக் கிடக்கும் பட்டியலை சிவகெங்கை சோம சுந்தரனாரும் கல்லல் மணிவாசகச் சரணாலய அடிகளாரும் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். மேல நாடு, நடுவுநாடு, சிறுகுடி நாடு, வெள்ளூர் நாடு, அஞ்சூர் நாடு, ஆனூர் நாடு, மல்லாக்கோட்டை நாடு, பட்டமங்கல நாடு, பாகனேரி நாடு, கண்டர் மாணிக்க நாடு, குன்னங்கோட்டை நாடு, தென்னிலை நாடு. இரவுசேரி நாடு, உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு, கப்பலூர் நாடு, சிலம்பா நாடு, இரும்பா நாடு, தேர்போகி நாடு, வடபோகி நாடு, கோபால நாடு, ஆற்றங்கரை நாடு, ஏழு கோட்டை நாடு, முத்து நாடு என்ற நாடுகள் மட்டுமன்றி இன்னும் பல நாடுகள் ஆராய்ச்சியாளர்களால் குறிக்கப்படுகின்றன. பல ஊர்கள் இணைந்து ஒரு நாடாகி அந்த நாட்டுக்கு ஒரு ஆற்றல் மிக்க தலைவன் "அம்பலக்காரர்" என்ற பெயரால் அழைக்கப்பட்டு அவனது ஆணைக்குக் கட்டுப்பட்டு மக்கள் வாழ்ந்திடுவர். அம்பலக்காரர் என்பது ஒரு வகுப்பாரைக் குறிக்கும் சொல்லாகச் சில நேரங்களில் பயன்படுத்தப்பட்டாலும் கள்ளர் நாடுகளின் தலைவர்களைத்தான் 'அம்பலக்காரர்" எனப் பட்டம் சூட்டி அந்தந்த நாடுகளின் குடிமக்கள் போற்றி வந்தனர்.