உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கலைஞர் மு. கருணாநிதி கல்யாணியின் முகம் மலர்ந்தது என்றாலும், அண்ணன் இல்லாத நேரத்தில் முதல் முதலாக எப்படிப் பயிற்சியைத் தொடங்குவது என்று திகைத்துப் போனாள்: 'அண்ணன் ஊரிலிருந்து வந்துவிடட்டுமே!" கல்யாணியின் பேச்சைக் கேட்டுத் தலையசைத்து விட்டால்-அதற்குள் வடிவாம்பாள் இடத்திற்குச் சுந்தரியே வந்துவிடலாமல்லவா? மீண்டும் வடிவுக்குக் குழப்பம்! அவளே முதலில் ஆரம்பித்துவிட்டால் பிறகு சுந்தரி வந்து நடனப் பயிற்சி தொடங்கி வைக்கிறேன் என்று சொல்ல மாட்டாள் என்ற நம்பிக்கை அவளுக்கு! "இன்று நல்ல நாள்! நான் வந்திருக்கிற வேளையும் நல்ல வேளை! இப்போது ஆரம்பித்து விடுவோம்! முதன் முதலாக வந்து திரும்பிப் போவதும் அபசகுனமாகி விடும்! அதனால் இப்போதே... வடிவாம்பாள் பேச்சுக்குக் கல்யாணி நாச்சியார் மறுப்பு ஏதும் உரைத்திடவில்லை! "சரி" என்று அவள் தலை அசைந்ததுதான் தாமதம்; நாதமுனி, தாளத்தை எடுத்து 'டைங்" என்று தட்டினான். வாளுக்குவேலியின் பெட்டி வண்டி திருக் கோட்டியூர் சுந்தராம்பாள் வீட்டு வாசலில் போய் நின்றது! வாளுக்குவேலி வண்டியிலிருந்து இறங்கவில்லை. வண்டிக்காரனை உள்ளே அனுப்பித் தனது வருகையைத் தெரிவித்துவிட்டு வரச் சொன்னான். இறங்கி உள்ளே சென்ற வண்டிக்காரன் திரும்பி வந்து "அய்யா! யாருமில்லிங்க வீட்டிலே! வேலைக்காரி மாத்திரம்தான் இருக்கிறா! சுந்தராம்பாள் அம்மா கோயிலுக்குப் போயிருக்காங்களாம்! அவுங்க தங்கச்சி. வடிவாம்பா அம்மா நம்ப பாகனேரி அரண்மனைக்கு நாட்டியம் சொல்லிக் கொடுக்கப் போயிருக்காங்களாம்!