உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 17 திருக்கோட்டியூர் கோயிலுக்குள் நுழைய முனைந்த வாளுக்குவேலியின் முன்னால், அவன் சற்றும் எதிர்பாராத வகையில் மேகநாதன் நின்றான். "என்ன மேகநாதன்! என்ன விசேஷம் ? திடீரென்று? வாளுக்குவேலி மிகுந்த பரபரப்போடு கேட்டான்! ஒன்றுமில்லை! எல்லாம் நல்ல சேதிதான்! சுறுத்த ஆதப்பன் போன காரியம் வெற்றியாம்! இதோ இந்தக் கடித உறை ஆதப்பன் அனுப்பியது. தங்களிடம் சேர்க்கச் சொல்லி!" மேகநாதன் கொடுத்த கடித உறையை வாங்கிக் கிழித்து அந்த அந்தி மாலை வெளிச்சத்தில் மெதுவாகப் படிக்கத் தொடங்கினான். அன்பு நிறைந்த அண்ணன் அவர்களுக்கு ஆதப்பன் வணக்கம். அக்னியூ கொடுத்த கடிதத்துடன் வெல்ஷ் துரையிடம் சென்று கொண்டிருந்த உறங்காப்புலியை வழி யிலேயே சந்தித்தேன். நிலைமைகளை விளக்கினேன். உறங்காப்புலி நமது உணர்வுகளைப் புரிந்துகொண்டு, கடிதத்தை என்னிடம் கொடுத்துவிட்டான். எனக்கும் அவனுக்கும் எந்தத் தகராறும் இல்லாமலே கடிதம் என் கைக்கு வந்து விட்டது. கடிதத்தில் ஆங்கிலேயர்களின் யுத்த ரகசியங்கள் சில சிக்கியிருக்கின்றன. மானா