உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கலைஞர் மு. கருணாநிதி கலைஞானமா இல்லை எனக்கு? கேளுங்கள் அய்யரே, கேளுங்கள்! என்று வெடிச் சொற்களை வீசிய வாளுக்குவேலி திடீரெனப் பாடத் தொடங்கினான். திருக்கோட்டியூர் பற்றி ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களின் தொகுப்பாக அந்தப்பாட்டு அமைந்தது! ""கோல் கொண்டு வா! கோல் கொண்டு வா" என்று வாளுக்குவேலி உரத்த குரலில் பாடியதும் வெள்ளை அய்யர் பயந்தே விட்டார்! பிறகுதான் அவருக்குப் புரிந்தது, அது பெரியாழ்வார் பாடிய திருமொழியென்பது! "கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும் எங்குந் திரிந்து விளையாடு மென் மகன் சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க நல் வக்க முடையதோர் கோல் கொண்டு வா! அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வா!" "இது பெரியாழ்வார் பாடியது-இதோ திருமங்கை யாழ்வார் திருக்கோட்டியூர் பெருமானைக் குறித்துப் பாடியது" என்று வாளுக்குவேலி கூறிக் கொண்டே தொடர்ந்து பாடினான். "வங்கமாகடல் வண்ணன் மாமணி வண்ணன் விண்ணவர் கோன்; மதுமலர்த் தொங்கல் நீண் முடியான், நெடியான்படி நடந்தான் மங்குல் தோய் மணிமாட வெண்கொடி மாக மீதுயர்ந் தேறி, வானுயர் திங்கள் தானணவும் திருக்கோட்டியூரானே" ஆழ்வார் பாசுரங்கள் வாளுக்கு வேலியின் கணீரென்ற குரலில் கலந்து இசைஞானப் பெருக்குடன் அந்த ஆலயத்திற்குள் அமுத மழையெனக் கொட்டிக் கொண்டிருந்தன. கோயில் பிரகாரத்தில் பிரதட்சணமாகச்