உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கலைஞர் மு. கருணாநிதி விருந்தும் நடன விருந்தும் நடந்திருக்குமா என ஐயுறும் வண்ணம் அவன் பாடினான்! அவள் ஆடினாள்! அவ்வூர்ப் பெருமான் மீது பாசுரங்களை இயற்றிய பெரியாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை யாழ்வார். திருமழிசை ஆழ்வார் ஆகிய ஐவரும் கூட வாளுக்குவேலி போல் இசை நயமும் குரல் நயமும் கொண்டு அந்த ஆலயத்தில் பாடியிருப்பார்களா என்பது சந்தேகமே! அந்தக் கலை நிகழ்ச்சியில் தன்னை அறவே மறந்து விட்டது போலத் திருப்பாற்கடல் எனப்படும் அந்தக் கோயிலின் குளம் அலைகளைக்கூட நெளிய விடாமல் மலைத்து நின்றது! இராஜ கோபுரம், தனது கவசங்களைக் கீழே இறக்கி அவர்களுக்குப் பரிசுகளாக வழங்கலாமா என்பது போல உயிர் பெற்று விளங்கியது! திருக்கோட்டியூர் பெருமாள் கோயிலில் தேனும் பாலும் கலந்து மழை! அந்த மழையில் நீலமணித் தோகை விரித்தாடும் கலைமயில்! செவிகள் செய்த தவமா? விழிகள் புரிந்த நோன்பா? எதற்குக் கிடைத்தது இந்தப் பயன் என்னும் படியாகப் பாடலும் ஆடலும் தொடர்ந்தது! ஆடிக்கொண்டேயிருந்த சுந்தரியின் நெஞ்சம் அவளையுமீறியாமல் வாளுக்கு வேலிக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்து விட்டது! இசையே வடி வெடுத்து வீரத் தோற்றம் காட்டி எதிரே நிற்பது போன்ற நம்பிக்கை, அவளுக்கு/ வாளுக்கு வேலியும் அந்த மின்னற் கொடியாளின் பொன்னவிர் மேனியில் ஒவ்வொரு அணுவிலும் தலை ஒளி பெருகிடும் அழகைக் கண்டு ரசித்தான். திடீரென அவன் கால்களில் விழுந்தாள் சுந்தரி! 'என்னை மன்னித்து விடுங்கள்! கலைக் கருவூலம் நீங்கள்!