உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 141 'வழக்கம் அப்படியிருக்கலாம்! ஆனால் அந்தப் பெண்ணிடம் சம்மதம் கேட்டு அவள் சரியென்று சொன்ன பிறகுதானே இந்தச் சம்பிரதாயங்கள் எல்லாம் நடைபெற வேண்டும்?" என்று நாதமுனியைப் பார்த்து வினவினாள்! உடனே லலிதாங்கி குறுக்கிட்டு "ஏன்மா? உனக்கு சம்மதம் இல்லியா? அப்படின்னா சொல்லிடு! இப்பவே அந்த ஆளுங்ககிட்ட சொல்லி எல்லாத்தையும் நிறுத்திடச் சொல்றேன்" என்று குறும்பாக இடித்தாள்! 'இல்லை! இல்லை! நீங்க வேற ஏதாவது இடையிலே புகுந்து குழப்பம் பண்ணிடாதீங்க!" என்று வெட்கத்தைக் காட்டிக் கொண்டு புன்னகை உதிர்த்தாள். 'நினைத்தது நடக்கப் போகிறது! நெடிய உருவும். வலிய புயமும் கொண்ட வாளுக்குவேலி தனது சின்ன இடை தழுவி, கன்னலிதழ் பருகி, பஞ்சணைப் பசி தீர்ப்பான்/ பணத்தால் அர்ச்சிப்பான்! பலரும் மதித்திடும் கெளரவத்தை அளிப்பான் வடிவின் நினைவுகள் கற்பனை வளையங்களாக உருண்டோடிக் கொண்டிருந்தன! அப்போது கல்யாணியின் அறைக்குள் காடையும் கௌதாரியும் குதித்தோடினர் குதூகல உணர்ச்சியுடன்! அம்மா! ரொம்ப நல்ல சேதி! நம்ப அய்யா, இந்த சீர்வரிசையெல்லாம் எங்கே அனுப்புறார் தெரியுமா?" "தெரிந்து கொள்ளத்தாளே உங்களை அனுப் பினேன். என்னையே வந்து கேள்வி கேட்கிறீர்களா?க அதைத் தெரிஞ்சுகிட்டுத்தாம்மா வந்திருக் கிறோம்! திருக்கோட்டியூர் சுந்தராம்பாள் வீட்டுக்குப் போவுது சீர்வரிசை"