உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கலைஞர் மு. கருணாநிதி "என் குறிக்கோளை நீங்கள் அறிய மாட்டீர்கள்! அது நிறைவேறும் வரையில் - நாள்தோறும் நடனப் பயிற்சி வழங்க இந்த வடிவு வந்து கொண்டேயிருப்பாள்!" கல்யாணி, கருப்பஞ்சாற்றில் தேன் கலந்த மொழியிலே வடிவைப் பார்த்துக் கேட்டாள் : "என்ன குறிக்கோள்?" என்று! “என்னையும் என் அக்காளையும். வெல்கிற அளவுக்குச் சிறந்த நாட்டிய மேதையாக எங்கள் கல்யாணி நாச்சியார் ஆக வேண்டும்! அதுவே என் குறிக்கோள்!" என்று சமாளித்தாள் வடிவாம்பாள்! வடிவு, மறுநாள் வருவதரகக் கூறிவிட்டு லலிதாங்கி, நாதமுனி மூவரும் கல்யாணியிடமும், காடை, கௌதாரியிடமும் விடைபெற்றுக் கொண்டார் கள். அவர்களை ஏற்றி வந்த சுந்தராம்பாளின் வண்டி பாகனேரி மாளிகையைவிட்டுத் திருக்கோட்டியூரை நோக்கி ஓடியது! வடிவின் மனோநிலையை லலிதாங்கியால் புரிந்து கொள்ள முடிந்ததால் வழியில் ஏதேதோ பேச்சுக் கொடுத்து அவள் மனதை மாற்றிட முயற்சி செய்தாள். வடிவு வாயே திறக்கவில்லை. வண்டி சுந்தரியின் வீட்டு வாசலில் போய் நின்றது. மூவரும் இறங்கினார்கள். தனது வேதனையையோ சீற்றத்தையோ அக்காளிடம் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள விரும்பாத வடிவு எதிரேயிருந்த தனது வீட்டுக்குச் சென்றுவிட வேண்டுமென்று முதலில் நினைத்தாலும் அக்காள் வீட்டுக்குப் போய்விட்டுப் பிறகு செல்லலாம் என்றே முடிவு செய்தாள்.