உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பாவையரின் உள்ளங்கைகள் நெருங்கிக் குவிந்து விரல்கள் மட்டும் விரிந்து அசைவதைப் போல ஒன்பான் தானியங்கள் முளைத்தெழுந்திருந்த பாலிகள் வரிசை வரிசையாக வைக்கப்பட்டிருந்தன; பாகனேரி. பட்டமங்கலம் ஆகிய இரு நாடுகளின் வீடுகளிலே. கருவண்டு உருண்டாடும். கண்ணழகியர் கையில் அடுக்கிய வளைகள் உண்டுபண்ணும் ஓசையெலாட் இசையாக முளைப்பாரித் திருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். சின்னஞ்சிறு சிங்காரப் பாலிகளைக் கரத்திலேந்தி வாளுக்கு வேலிக்கு வாழ்த்துப் பாடியோர் பாகனேரியில்! தங்களின் தலைவன் வல்லத்தரையனுக்கு வாழ்த்திசைத்தோர் பட்டமங்கலத்தில்! முளைப்பாரி மிக விரைவில் செழித்து முளைத்துப் பாலியிலே குலுங்கி நின்றால் அந்த மண் வளத்தைக் கணக்கெடுத்து அந்த ஆண்டு தங்கள் பகுதியில் காடுமேடுகளில் விளைச்சல் எப்படியிருக்கும் எனத் தெரிந்துகொள்ளும் ஆற்றல் மிக்கோர் அந்த மக்கள்! பூமியில் வைத்துக் கொளுத்திடும் 'புதவாணம்' போல், வான் நோக்கி வளங்கொழிக்க வளர்ந்திருந்தன அந்த முளைப்பாரிகள்! இல்லத்து முகப்புகளில் ஆலயத்து வாயில்களில் முளைப்பாரித் திருவிழாவுக்கான கொண்டாட்டங்கள் முடிவுற்று ஆட்டபாட்டங்கள், முளைப்பாரிகள் நீர் நிலைகளில் மிதக்க விடப்பட்டன.