உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 கலைஞர் மு. கருணாநிதி 'அட! வாழ்க்கையாவது ஒண்ணாவது வடிவு! அது நம்பளா பாத்து வகுத்துக்கிறதுதானே! வாளுக்குவேலித் தேவரே பிறக்காம இருந்திருந்து வடிவாம்பாள் மாத்திரம் பிறந்திருந்தா என்ன செய்றது? வாளுக்குவேலி இல்லேன்னா யாராவது ஒரு வயலுக்கு வேலி வந்துட்டுப் போறான்!" “எத்தனை வேலி வந்தாலும் சரிதான்/ அவர்கள் எல்லாம் என் மஞ்சத்தை ஆக்ரமிக்க அனுமதிப்பேன்! ஆனால் என் நெஞ்சத்தை ஆக்ரமிக்க வாளுக்குவேலிதான் எனக்குத் தேவை! கடலெனக் கனகமணிகளைக் குவிப்போர்க்கு என் உடலை அளிப்பேன்; ஆனால் என் உள்ளத்து வேட்கையைத் தீர்க்க வாளுக்குவேலிக்காகக் காத்துக் கொண்டேயிருப்பேன்!" "அப்படின்னா ஒண்ணு செய்யட்டுமா? இப்பவே உங்க அக்காகிட்டே சொல்லி அவரை உன்கிட்ட ஒப்படைக்கும்படி பண்ணட்டுமா?" "காதல் பிச்சையா? அதற்கு நீங்க சிபாரிசா? லலிதாங்கியம்மா! என் ஆசையைக் கொன்று போட்டு விட்ட அக்காளை என் சரசங்களால் சாகசங்களால் வென்று காட்டுகிறேனா இல்லையா என்று பாருங்கள்!" சரசம்! சாகசம்! யாருகிட்டே? உங்க அக்கா கிட்டேயா? பொம்பளைக்குப் பொம்பளை அது என்னம்மா சரசம்?" "வேதனையில் வெந்து கொண்டிருக்கிறேன்! விளையாடதீங்க! பாகனேரி அம்பலக்காரரை என் வீட்டுப் படுக்கையறையில் தவம் செய்யும் முனிவராக ஆக்கா விட்டால் என் பெயர் வடிவாம்பாள் அல்ல! வலிதாங்கி திகைத்து நின்றாள்! அதற்கு மேல் வடிவிடம் பேசிப் பயனில்லை என்பதைப் புரிந்து