உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 கலைஞர் மு. கருணாநிதி வாளுக்கு வேலி எழுந்து, கட்டிலுக்கருகே கிடந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். சுந்தரியும் அவனுக் கெதிரே கீழே தரையில் உட்கார்ந்து பழச்சுளைகளை உரித்து ஒவ்வொன்றாகத் தந்து கொண்டிருந்தாள். சில சுளைகளை அவன் கையில் கொடுத்தபிறகு, அவனது வாயில்தான் கொடுப்பேன் என்று சிணுங்கினாள்! இறுதியாக அவனும் இணங்கினான். இரண்டொரு சுளைகளைக் கொடுத்துவிட்டு-ஒரு களையை அவன் உதட்டருகே கொண்டு சென்று, அவன் திறந்தபோது தன் வாயில் போட்டுக்கொண்டு, களுக் என்று சிரித்தாள். வாயைகு அவள் கையிலிருந்த பழச்சுளையை அவன் வாங்கி, அவளது வாயில் கொடுத்தான். அவள் அவன் விரல்களை மெதுவாகக் கடித்தாள். விரலை இழுத்துக் கொண்ட வாளுக்குவேலி, அவளைப் பார்த்து "ஆமாம்! இவ்வளவு பிரியம் வைத்திருக்கிற நீ, அன்றைக்கு என்னை அப்படி வெறுத்துப் பேசினாயே-ஏன்?" என்றான். அவன் கை விரல்கள் அவளது கூந்தலைக் கோதிக் கொண்டிருந்தன! 'கருங்கல் பாறைக்களுக்கிடையிலேதானே குளிர்ந்த அருவி பாய்கிறது! அதுபோலத்தான் நமது கடுமையான வாக்குவாதத்திற்கிடையே இந்த அன்பு அருவி உருவாகியிருக்கிறது!" சுந்தரியின் பதிலைக் கேட்டு, அவன் மெய்ம்மறந்து உட்கார்ந்திருந்தான். அவளும் அவனது தொடையில் தலையைப் புதைத்துக் கொண்டு இன்பத்தில் மிதந்து கொண்டிருந்தாள். பஞ்சணையோ பசியால் துடித்தது! அதன் பசிப்பிணி போக்கி முதல் தடவையாக அதன் வாழ்த்தைப்