உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 159 சிரசை "சிப்பியின் முத்து நான்! உங்கள் அலங்கரிக்கும் மகுடத்தில் ஒரு இடம் கிடைத்துவிட்டதே எனக்குப் போதும் "என்னதான் நீ சொன்னாலும், டன் த.ய மாளிகையில் எங்கேயோ ஒரு மூலையில் ஏமாற்றத்தின் சோகப் பின்னணி ஒலிப்பதை என் காதுகளால் கேட்க முடிகிறது சுந்தரி!" 'ஒரு வட்டு உருண்டையை ஒரு குழந்தையின் கையில் கொடுத்துவிட்டு, அதைத் தின்னப்போகும் போது இன்றைக்கு வேண்டாம் கண்ணு; இன்னொரு நாளைக்குச் சாப்பிடலாம் என்று திரும்ப வாங்கிக் கொண்டால்-என்ன தான் பொறுமையான குழந்தையாக இருந்தாலும் அதன் முகத்தில் மாற்றம் ஏற்படத்தானே செய்யும்!! "சுந்தரி! ஒரு கலைமாதின் வீட்டுக்கு ஒரு அம்பலக்காரர் வருகிறோம் என்ற உணர்வோடு நான் வர வில்லை; சம்பிரதாயப்படி சீர்வரிசைகள் அனுப்பி வைத்தேன்! அவ்வளவுதான் என் தங்கையின் மீது எனக்கிருக்கும் அன்பு, இன்றுமுதல் உனக்கும் ஏற்பட வேண்டும்! அதனால் கல்யாணியின் கழுத்தில் தாலி ஏறும்வரையில் நமக்குள் உடலுறவு இல்லையென்று என்னைப் போலவே நீயும் விரதம் பூண்டிட வேண்டும்!" "நீங்களே என் உடலில், உள்ளத்தில், உயிரில், அனைத்திலும் உறவு கொண்டுவிட்ட பிறகு, நீங்கள் சொல்லும் அந்த உறவுக்கு நமது சிந்தனையில் முதல் டம் கிடையாதே!" அவளது சுந்தரியின் முகத்தைத் தனது நெஞ்சத்தில் மென்மையாக அழுத்திக் கொண்டான். மலரிதழினும் சிறந்த கைவிரல்கள் அவனது முதுகில் ஊர்ந்து கொண்டிருந்தன! சிறிதுநேரம் அந்த மணம் கமழும் அறையில் அசைவற்று நின்றார்கள்.