உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 161 'இரவு மதகுப்பட்டியில் ஒரு முக்கியமான வேலை இருக்கிறது! அதை முடித்துக்கொண்டு காலையில் பாகனேரியில் இருக்க வேண்டும்." வாளுக்கு வேலி தனது கடமையை அவளிடம் குறிப்பாக உணர்த்தி விட்டு-விடை பெற்றுக் கொண்டான். தெரு வாயில்புறம் வரையில் வந்து நின்று அவனை வழியனுப்பி வைத்தாள் சுந்தராம்பாள்! கதவைத் தாளிட்டுவிட்டு, கூடத்தில் இருந்த ஊஞ்சலிலேயே முழங்கையைத் தலையணையாக வைத்துக் கொண்டு படுத்துவிட்டாள்! முதலில் அவளுக்கு ஏற்பட்ட சலனம் போல ஊஞ்சல் சிறிது நேரம் ஆடி அதன் பிறகு அவளுக்கு அமைதி மலர்ந்துவிட்டது என்பதற்கு அடையாளமாக நின்ற விட்டது! மாடியில் மஞ்சம் மல்லிகைக் குவியல் ஊதுவத்தியின் ஓய்யாரம்-எல்லாமே ஆணவமடங்கிக் கேட்பாரற்றுப் போயின! வேதனையில் புரளும் ஆரணங்குகள்-விரகதாபத்தில் நெளியும் ஆடவர்கள் - இரண்டுக்குமிடமின்றி இன்ப லோகத்தில் விளையாடி மகிழும் காதல் ஜோடிகள் அனைவரையும் மூடியிருந்த திரையை விலக்கி, ஆதவன் கீழ்வானத்தில் செம்பருத்திப் பூவாக முளைத்தான்/ உதயக் கதிரை வாழ்த்தியவாறு வாளுக்கு வேலி, மதகுப்பட்டி யில் இருந்து பாகனேரி நோக்கி வந்து கொண்டிருந்தான்! அண்ணன் வருகைக்காகப் பாகனேரியில் தம்பி ஆதப்பன் காத்துக் கொண்டிருந்தான். மேகநாதனிடம் கொடுத்தனுப்பிய கடிதத்தில் எழுதியிருந்த விபரங்களுக் கேற்ப, தனது பணிகளை முடித்துக் கொண்டு வைகறைப் பொழுதிலேயே பாகனேரிக்கு வந்து சேர்ந்திருந்தான்.