உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 7 அவனது சுருள்முடி ஓரளவு வளர்ந்து நீண்டிருந்த அழகைக் காண முடிந்தது. அண்ணன் தம்பிகள் மட்டுமல்ல; அவர்களது சகோதரி வீரம்மாளும், வீரம்மாளின் கணவன்-வேழம் நிகர்த்த உருக் கொண்ட உறங்காப் புலியும்கூட அவர்களுடன் வந்து கொண்டிருந்தனர். தங்களின் பட்டமங்கல நாட்டுக்கு அரண்போல இருக்கின்ற அம்பலக்காரர் குடும்பமே பிள்ளையார் கோயில் தரிசனத்திற்கு வருகை தந்து முளைப்பாரி விழாவைச் சிறப்பிப்பதைக் குழுமியிருந்தோர் பெரும் பேறாகக் கருதினர். வணங்கியோர்க்குத் தலையசைத்து ஆசி நல்கிய வாறு அம்பலக்காரர் வல்லத்தரையன் ஆலயத் திற்குள் நுழைந்தான்; தனது குடும்பத்தினருடன்! வல்லத்தரையனையும் மற்றவர்களையும் புன்னகை மலர வரவேற்ற அர்ச்சகர், விநாயகருக்குத் தூப தீபம் காட்டியவாறு மந்திரமொலித்துவிட்டு வழக்கப்படி பட்டுப் பரிவட்ட மரியாதை செய்து பிரசாதங்களையும் அளித்தார். அண்ணா! இந்த வருடம் நமது விநாயகர் முகத்தில் ஒரு ஒளி வீசுகிறது பார்த்தாயா?' தங்கை வீரம்மாளின் குரல் கேட்டு வல்லத்தரையன் அவள் பக்கம் ஆவலுடன் திரும்பினான். ஆமாம்! உண்மைதான்! ஒளி வீசுது! காரணம் அர்ச்சகர் அளவுக்கு மீறிக் கற்பூரத்தை ஏற்றி வைத்து விட்டார்." வீரம்மாளின் கணவன் வல்லத்தரையனின் மைத்துனன் உறங்காப் புலியின் விளக்கமிது! அது கேட்டுச் சிரித்துக் கொண்டே வல்லத்தரையன், வீரம்மாளிடம், "நீ என்னம்மா காரணம் கற்பிக்கின்றாய்?