உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 169 நாள் நான் பார்க்கிறேன்! நாங்கள் மிக முக்கியமான ஒரு காரியத்திற்காகப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம்." அந்தப் பதில் வடிவுக்குத் திருப்தி அளிக்காதது மட்டுமல்ல; சுந்தரியைக் குறிப்பிட்டு அவள் தங்கை என்பதால்தான் தனக்குச் சிறப்பு என்பது போல வாளுக்கு வேலி கூறியதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வாளுக்குவேலியை எப்படியும் வளைத்துப் போட வேண்டுமென்று அவள் கொண்ட வஞ்சினத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கல்யாணி நாச்சியாருடன் சிரித்துப் பேசிக் கொண்டே மாளிகைக்குள் நுழைந்தாள் தனது குழுவினருடன். கோட்டியூர் நிறுத்தப்பட்டிருந்த வாசலில் வண்டியில் தொங்கிய திரையில் "சுந்தரி" என்று எழுதப்பட்டிருந்ததையே சிறிது நேரம் வாளுக்குவேலி பார்த்துக் கொண்டு நின்றான். அந்த வண்டியில் வந்திறங்கிய வடிவாம்பாளைப் பற்றி அவனுக்கென்ன கவலை திரையில் இருந்த 'சுந்தரி' என்ற எழுத்துக்கள் அல்லவா அவனை அப்படியே மயங்கி நிற்க வைத்து விட்டன! 'நகரலாமா?" மேகநாதனின் குரல் கேட்டு அசட்டுச் சிரிப்புடன் வாளுக்குவேலி வாயிற்புறம் விட்டகன்றான். அதற்குள் ஆதப்பன் ஆணையின்படி ஏற்பாடு செய்யப்பட்ட சாரட் வண்டி வந்து நின்றது. அதில் வாளுக்கு வேலியும் மேகநாதனும் ஏறிக் கொள்ள ஆதப்பன் சாரட்டைக் கிளப்பினான். உள்ளே, கல்யாணி நாச்சியார் நடனப் பயிற்சிக்குத் தயாராகி, வடிவாம்பாளின் முன்னே வந்து நின்றாள்.

  • நாதமுனி தாளத்தைத் தட்டினான். லலிதாங்கி பாடத்

தொடங்கினாள். கல்யாணி ஆடினாள். வடிவு இடை யிடையே திருத்தங்களைக் கூறிக் கொண்டிருந்தாள்.