உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 179 நோக்கிப் புறப்பட்டான்! பகை வளர்க்க வேண்டுமே! பரங்கியனிடம் வாங்கிய பவுன் காசுகளுக்குப் பணிபுரிந்திட வேண்டுமே! இதற்கிடையே மாவலிக்கண்மாய் சுதந்திர வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த வாளுக்குவேலிக்கும், ஆதப்பனுக்கும்- பட்டமங்கலம் காளையின் அட்டுழியங்களும் அது பாகனேரிக்குள் விரட்டப்பட்டிருக்கும் செய்தியும் எப்படியோ எட்டி விட்டது! ஆதப்பன் அங்கிருந்த ஒரு வீரளின் குதிரையைக் கேட்டுப் பெற்றுப் பாகனேரி நோக்கிக் குதிரையைத் தட்டி விட்டான்! ஜல்லிக் கட்டுக் காளையை வைரமுத்தன் திருப்பி அனுப்பியதும் ஆனால் உறங்காப்புலி அந்தக் காளையுடன் மீண்டும் பாகனேரி நோக்கி வருவதும் சுறுத்த ஆதப்பனுக்குத் தெரியாது! பட்டமங்கலத்துக் காளையின் முரட்டுக் கொம்புகளுக்கு, பாகனேரி மக்கள் எத்தனைப்பேர் பலியாகியிருப்பார்களோ என்ற ஆழ்ந்த கவலையுடன் அக்னிஜுவாலை பறக்கும் கண்களுடன் ஆதப்பன் பாகனேரிக்குள் நுழைந்தான். அவன் நுழைந்தபோது பார்த்த அந்தக் காட்சி அவனை ஒரு குலுக்குக் குலுக்கியது. குதிரையின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். பாகனேரித் தெருக்களில் மனித நடமாட்டமே இல்லை! சிறுவர்களும், பெரியவர்களும், பெண்டிரும் வீட்டுக் கூரைகளிலும் மதிற் சுவர்களிலும் - மண்டபங்களிலும் மரக்கிளைகளிலும் ஏறி உட்கார்ந்திருந்தனர். சில வாலிபர்களின் உடல்கள் பட்டமங்கலத்து ஜல்லிக்கட்டுக் காளையால் கிழிக்கப்பட்டு இரத்தம் பெருகத் தெரு மண்ணில் கிடந்தன! அவற்றினிடையே உரக்கச் சிரித்தவாறு உறங்காப்புலி அறைகூவல் விடுத்துக் கொண்டிருந்தான்.