உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 காளைக்கு முன்னால் களத்தில் குதித்துவிட்டான் கறுத்த ஆதப்பன் என்றதும் மண்டபங்களிலும் மரக் கிளைகளிலும் உயிருக்குப் பயந்து ஏறி ஒளிந்து கொண்டி ருந்தோர் ஒவ்வொருவராகக் கீழே இறங்கிச் சூழ்ந்து நிற்கத் தொடங்கினர். காளையின் கொம்புகளைப் பிடித்துக் கொண்டு கம்பீரமாகக் கர்ச்சித்துக் கொண்டிருந்த உறங்காப்புலி, எந்த விநாடியிலும் காளையை ஆதப்பன் மீது மோதவிடத் தயாராக இருந்தான். சுரண்டைக் காட்டில் அவன் மனைவிக்கு நேராக ஆதப்பனிடம் அவன் பட்ட அடி அவனுக்கல்லவா தெரியும்! அதற்குப் பழிவாங்கிக் கொள்ளவும், பரங்கிக் கர்னலுக்கு எழுதிக் கொடுத்துள்ள துரோக சாசனத்திற் கேற்பப்பாகனேரி பட்டமங்கலத்துப் பகையை வளர்க் கவும் அருமையான சந்தர்ப்பம் கிடைத்ததென்று அந்தச் 'சகுனி' மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்திருந்தான். பெட்டி வண்டியில் இருந்தவாறு கல்யாணி நாச்சி யார் பதைபதைக்கும் உள்ளத்துடன் நடக்கப் போவதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவளே அந்தக் காளையை எதிர்த்து வீழ்த்திட எண்ணிப் புறப்பட்டபோது ஏற்படாத அச்ச உணர்ச்சி, தனது சகோதரன் வெறுங்கையுடன் காளையை அடக்கக் கிளம்பியபோது அதிகமாகத் தலை தூக்கியது.