உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 185 அவமானப்படுத்தி என் மைத்துனன் உறங்காப்புலியையும் கேவலப்படுத்தும் இந்த ஈனச் செயலை, மானமுள்ள மறவன் நான் மன்னிக்கவே மாட்டேன்" வல்லத்தரையன் வாளை உருவிக் கொண்டு அந்த வேடிக்கை பார்க்கும் கூட்டத்திற்கிடையே சுழன்றான். 'நமது வழக்கப்படி மஞ்சு விரட்டுக்கு விட வேண்டிய ஜல்லிக்கட்டுக் காளையை வேண்டுமென்றே. ஏவி விட்டு அந்தப் பொல்லாத காளை பல உயிர்களைக் குடித்ததுமல்லாமல் பாகனேரிக்கும் அறைக வலாக வந்து நிற்கிறதென்றால், அதைத் தூண்டி விட்ட துன்மார்க்கர் களுக்குப் பாடம் போதிக்க வேண்டாமா? அதுதான் இது கறுத்த ஆதப்பன் கம்பீரமாகப் பதில் கூறிக் கொண்டே வல்லத்தரைய அம்பலக்காரரின் முன்னால் வந்து நின்றான். 'நியாயம் பேசுகிறாயோ நியாயம்! அன்று சுரண்டைக் காட்டிலே என் மைத்துனன் உறங்காப் புலியைச் சுற்றி வளைத்துத் தாக்கி அவன் குதிரையையும் கொன்று குவித்தாயே! அதற்குப் பதில்தான் நான் இந்தக் காளையைப் பாகனேரிக்கு அனுப்பியது!" "சுரண்டைக் காட்டு நிகழ்ச்சியா? அதை நான் சொல்வதும் வெட்கக்கேடு நீங்கள் தெரிந்து கொள்வதும் மானக்கேடு!" "இப்போது என் கண் எதிரே நடைபெறுகிற வெட்கக் கேட்டையும் மானக்கேட்டையும் விடவா இனிமேல் ஒன்று நடைபெறப் போகிறது... பட்ட மங்கலத்தைத் தலை குனிய வைத்த பாதகா! இதோ பார் அதற்குப் பழி தீர்க்க உன்தலை முடியை வெட்டி எறிகிறேன்!"