உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 187 முத்தன் தனது வாளினால் அண்ணனின் வாளைத் தடுத்து நிறுத்தி, அண்ணா! நடந்தது நடந்து விட்டது! உங்கள் கருணை உள்ளத்தின் பெருந்தன்மையோடு ஆதப்பனை மன்னித்து விடுவதுதான் தங்களுக்கும் பெருமை!" என்றான். வல்லத்தரையன் பிறகு அந்த இடத்தில் நிற்கவில்லை. வாளுக்கு வேலியின் ஆணைப்படி உறங்காப் புலியும் பட்டமங்கலத்துக் காளையும் விடுவிக்கப் படவும், வைரமுத்தன் வல்லத்தரையனைத் தொடர்ந்து அமைதியாக நடந்து செல்லவுமான அந்தப் பயங்கரம் நிறைந்த சூழ்நிலையிலும் வைரமுத்தனின் அணுகு முறையைத் தன் மனத்திற்குள்ளாகப் பாராட்டிக் கொண்டி ருந்தாள் கல்யாணி நாச்சியார்! மயான அமைதி குடி கொண்ட அந்த இடம் சிறிது நேரத்தில் ஒவ்வொருவரையும் வழியனுப்பிக் கொண்டிருந்தது. வல்லத்தரையனும், வைரமுத்தனும், உறங்காப் புலியும்-பட்டமங்கலத்துக் காளையுடன் ஊர் வந்து சேர்ந்தார்கள்! அன்றிரவு பட்டமங்கலத்து மாளிகையில் யாருக் கும் உறக்கம் வரவில்லை; உறங்காப்புலியைத் தவிர! அவனைப் பொறுத்தவரையில் அவனது துரோகத் தொண்டுக்கு முதல் வெற்றி கிடைத்து விட்டது! கர்னல் அக்னியூ துரையின் திட்டப்படி பாகனேரி யும் பட்டமங்கலமும் பகை நாடுகளாகவே நிலை பெற்றிட இதைவிட ஒரு நல்ல ஆரம்பம் எப்படி இருக்க முடியும்! இனிமேல் ஆங்கிலேயருக்கு எதிரான அணி வகுப்பில் இணைந்து எதிர்ப்புப் படையை வலுப்படுத்தும் காரியத்தை இரண்டு அம்பலக்காரர்களும் கவனிக்கப்