உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 என்றவாறு. கலைஞர் மு. கருணாநிதி வல்லத்தரையன் காளையின் கொம்புகளுக்கு நேராகத் தன் நெஞ்சைக் காட்டிக்கொண்டு பாய்ந்தான். சவுக்கடி பொறுக்கமுடியாமல் வலியால் துள்ளித் துவண்டு கொண்டிருந்த அந்தக் காளையும் வல்லத்தரையன் மீது ஏற்பட்ட சினத்தின் சிகரத்தில் அவன் தன் முன்னால் நீட்டிய நெஞ்சுக்கு நேராகத் தன் கொம்புகளைக் கீழிருந்து மேலாகப் பாய்ச்சியது. ஆம்; வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது! வல்லத்தரையனின் விலா எலும்புகளுக்குக் கீழே குத்திக் கொண்ட கொம்புகள், அவன் இருதயத்திலிருந்தே நேரடியாக இரத்தப் பிரவாகத்தை ஏற்படுத்தி உடனடி முடிவை அவனுக்கு ஏற்படுத்தின. அக்கணமே சாய்ந்து விட்டான். மலையொன்று சாய்ந்ததுபோல அந்த மாவீரன் வைரமுத்தனும் வீரம்மாளும் மற்றவர்களும் அருகே நெருங்குவதற்குள் பட்டமங்கலத்துத் தன்மானத் தாமரையாக வல்லத் தரையன் குருதித் தடாகத்திலே-பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தான்! "தம்பீ! மானங்காக்கும் சீமை இது! மானங்காக்கத் தவறாதே!" என்ற இறுதி உச்சரிப்புகளுடன் இரத்தம் தோய்ந்த அவன் இதழ்கள் மூடிக்கொண்டன. வீரம்மாளின் மடியில் அவளது அண்ணன் வீரர்குல திலகம் வல்லத்தரையனின் விழிகள் குத்திட்டு நின்றன. அண்ணனின் இமைகளைத் தங்கை வீரம்மாள் அவனுக்கு வலிக்குமோ என்ற உணர்வுடன் மெல்ல மூடினாள்.