உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 197 பட்டமங்கலத்து மாளிகைக் கூடத்தில் மக்களின் பார்வைக்காக வல்லத்தரையனின் உடல் அலங்கரிக்கப் பட்ட ஒரு மேடையில் வைக்கப்பட்டிருந்தது; தங்களின் அருமைத் தலைவனை இழந்துவிட்ட பட்டமங்கலத்து மக்கள் சாரை சாரையாக வந்து வல்லத்தரையனின் மூச்சற்ற உடலைக் கண்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுது புலம்பினார்கள். உடல் வைக்கப்பட்டிருந்த மேடைக்கருகே நின்று கொண்டிருந்த உறங்காப்புலி, அங்கே குழுமிய மக்களிடம் பாகனேரி குறித்துப் பழியுரைக்கும் வேலையிலேயே மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தான். அவனுக்கு ஆங்கில அதிகாரி அக்னியூ கொடுத்திருந்த அரும்பணி அதுதானே! அந்தப் பணியை அவன் ஒழுங்காக நிறைவேற்றிக் கொண்டிருந்தான். ஜல்லிக்கட்டுக் காளையுடன் உறங்காப்புலி, பாகனேரிக்குச் சென்று சவால்விட்ட நிகழ்ச்சி மறைக் சுப்பட்டு விட்டது! காளையின் கொம்புகளுக்குப் பாகனேரி வாலிபர்கள் பலர் பலியான செய்தியும் மறைக்கப்பட்டு விட்டது! வல்லத்தரையன், தன் தம்பி ரைவமுத்தனுடன் ஏதோ வேலையாகப் பாகனேரியைக் கடந்து சென்றபோது அவனை வழிமறித்துத் தலை முடியை வெட்டிவிட்டார்கள் என்ற ஒரு கற்பனைக் கதை மட்டுமே. உறங்காப்புலியினால் பட்டமங்கலம் மக்களிடம் பரப்பப்பட்டது சிலர் நம்பினார்கள்! சிலர் சிந்தித்தார்கள்/ அப்படியா நடந்திருக்கும் என்று சிலர் சந்தேகப்பட்டார்கள்! பாகனேரியில் இருந்து வந்துள்ள செய்திகளையும் பட்டமங்கலத்து மக்களால் அறவே புறக்கணித்துவிட முடியவில்லை. துக்கம் விசாரிப்பதற்கும், வல்லத்தரைய அம்பலக் காரருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கும் வாளுக்கு